விஜயமாலா எப்படி சில்க் ஸ்மிதாவாக மாறினார் தெரியுமா.? மறைந்த நடிகர் வினுசக்கரவர்த்தி பேட்டி ஒன்றில் சொன்ன செய்தி.

silk
silk

தமிழ் சினிமாவில் வெற்றியை மட்டுமே ருசித்த நடிகைகளில் ஒருவர் சில்க் ஸ்மிதா 90 காலகட்டங்களில் பெருமளவு கிளாமர் கதாபாத்திரங்களில் நடிப்பது மற்றும் ஐட்டம் டான்ஸ், குத்து பாடல் போன்றவற்றில் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தால் இது அவரது ரசிகர்களை துள்ளல் ஆட்டம் போட வைத்தது.

சினிமா உலகில் வெற்றியை ருசித்து இருந்தாலும் சில மன உளைச்சல்கள் காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவரது அழகு மற்றும் திறமையை இன்றளவும் பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் வரை பேசித்தான் வருகின்றனர். இந்த  நிலையில் நடிகை சில்க் ஸ்மிதா எப்படி சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தார் என்பதை வினுசக்கரவர்த்தி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் அதில் அவர் சொல்லவருவது.

என்னுடைய பட தயாரிப்பாளர் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக நடிக்க நடிகை  வேண்டும் என்று பல நடிகைகளின் பெயர்களை சொல்லியிருந்தார் ஆனால் எனக்கு அதில் எந்த ஒரு ஈடுபாடு இல்லை புதிதாக ஒரு நடிகையை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது அப்போது ஒரு நாள் மாவு அரைக்கும் மிஷின் பக்கத்தில் ஒரு பெண்ணை பார்த்தேன் அவர் சட்டென்று திரும்பிப் பார்க்கும்போது அவருடைய கண் காந்தம் போல் என்னை ஈர்த்தது.

அப்பொழுது அவரிடம் பேசினேன் அவர் என்னுடைய பெயர் விஜயமாலா ஆந்திராவை சேர்ந்தவர் தமிழ்நாட்டிற்கு வந்து 17 நாட்கள் ஆகிறது என சொன்னார். உடனே நான் நடிக்கிறேன் என கேட்டேன் அதற்கு அவர் நான் எங்கள் ஊரில் திருவிழாக்களில் நடனம் ஆடியிருக்கிறேன் எனக்கு நடனம் ஆட ஆசையா இருக்கு சொன்னார் எப்படி நடிப்பது பேசுவது என்பது குறித்து அவருக்கு சொன்னேன். 12 நாட்களில் எல்லாம் கற்றுக் கொண்டு தயாரானார்.

பின் அவரை எனது தயாரிப்பாளர்கள் இயக்குநர்களுக்கு காண்பித்தேன் அவரும் பார்த்து விட்டு இந்த பெண்ணை எங்கே பிடித்தாய் என கேட்டனர் ஒட்டு மொத்த தமிழ்நாட்டையும் இவர் கலக்கப் போகிறார் என கூறினார்கள் அதேபோல வரும் கலக்கினார் என வினுச்சக்கரவர்த்தி சொன்னார்.