Vijayakanth : மக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடும் நாயகன் கேப்டன் விஜயகாந்த் இவர் திரையுலகிலும் சரி அரசியலிலும் சரி வெற்றியை மட்டுமே கண்டவர். இப்படிப்பட்ட விஜயகாந்த் ஏழை எளிய மக்களுக்கும் தன்னை சுற்றி இருந்தவர்களுக்கும் காசை அள்ளி அள்ளிக் கொடுத்து இருக்கிறார்.
அதனாலையே இவரை கருப்பு எம்ஜிஆர் என பலரும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடியனார். நேற்று உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எழுதினார் இவருடைய இறப்பு சினிமா பிரபலங்கள், அரசியல்வாதியும் தாண்டி தமிழக மக்களையே துயரத்தில் ஆழ்த்தியுள்ளது இவரது மறைவை இன்னும் தாங்கிக் கொள்ள பலராலும் முடியவில்லை..
விஜயகாந்தின் உடலை சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களும் நிண்ட வரிசையில் நின்று பார்த்த வண்ணம் இருந்தனர். விஜயகாந்த்தை புரட்சி கலைஞர், கருப்பு எம் ஜி ஆர், கேப்டன் என பல பெயர்களில் அழைக்கின்றனர். கேப்டன் பெயர் விஜயகாந்த் எப்படி வந்தது என்பது குறித்து இங்கு விலாவாரியாக பார்ப்போம்..
பலரும் விஜயகாந்தின் 100 – வது படம் கேப்டன் பிரபாகரன் அதனால்தான் கேப்டன் என பெயர் வந்தது என பலரும் நினைக்கின்றனர் ஆனால் அது உண்மை இல்லை. உண்மையிலேயே விஜயகாந்துக்கு கேப்டன் பெயர் வாங்கி தந்த திரைப்படம் அவர் நடித்த செந்தூரப்பூவே படத்தின் மூலம் தான் செந்தூரப்பூவே படத்தில் விஜயகாந்தின் கதாபாத்திரத்தின் பெயர் கேப்டன் சௌந்தர பாண்டியன்.
அன்றிலிருந்து தான் அந்த படத்தில் விஜயகாந்த் கேப்டன் என்று அழைக்க ஆரம்பித்தார்களாம் கேப்டன் சாப்பிட்டாரா.. கேப்டன் கிளம்பி விட்டாரா.. என்றுதான் கேட்பார்களாம் அதிலிருந்து அவரது ரசிகர்கள் கேப்டன் என அழைக்க ஆரம்பித்து விட்டனர் என சினிமா பத்திரிகையாளர் ஒருவர் கூறி இருக்கிறார்.