டிக்கிலோனா திரைப்படத்தில் வரும் பேர் வச்சாலும் பாடல் எப்படி உருவானது தெரியுமா.? பல வருடங்கள் கழித்து அந்த ரகசியத்தை ரசிகர்களுக்கு சொன்ன இளையராஜா.! இணையத்தில் கலக்கும் வீடியோ காணொளி இதோ.!

santhanam

வெள்ளித்திரையில் அந்த காலத்தில் பாடிய பாடல்களை தற்போது ரீமேக் செய்து பல நடிகர்களும் தங்களது திரைப்படத்தில் வைத்துக்கொள்கிறார்கள் அப்படி இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் மைக்கேல் மதனா காமராஜன் இந்த திரைப்படத்திற்கு இசை அமைப்பாளர் இளையராஜா தனது முழு திறமையால் இசை அமைத்திருப்பார்.

இந்த திரைப்படத்தில் இருந்து வெளியான அனைத்து பாடல்களும் தற்போது வரை மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி வருகிறது குறிப்பாக இந்த திரைப்படத்தில் வரும் பேர் வச்சாலும் என்ற பாடல் தற்பொழுது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் இந்த பாடலைத் தான் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ரீ கிரியேட் செய்து சந்தானம் நடித்த டிக்கிலோனா திரைப்படத்திற்கு கொடுத்துள்ளார்.இந்நிலையில் இந்த பாடல் எப்படி உருவானது என்பது பற்றி இளையராஜா பேசியுள்ள வீடியோ காணொளி இணையதளத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

அதில் இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவும்,கமல்ஹாசனும் இந்த பாடலை உருவாக்கும் பொழுது ஸ்டுடியோவிற்கு வந்துள்ளார்கள்.அப்பொழுது இளையராஜாவிடம் டியூன் போட்டு முடித்து விட்டோம் என்று கூறி கவிஞர் வாலியை அழைத்து வந்து நான் டீயூனை படினேன் அப்பொழுது இப்படி எல்லாம் டியூன் போட்டால் நான் எப்படி பாட்டு எழுதுவது என்று கேட்டுள்ளாராம் கவிஞர் வாலி.

அப்பொழுது உடனே நான் துப்பார்க்குத் துப்பாய என்று திருக்குறளை அவரிடம் இந்த டியூனில் அமைக்க சொன்னேன் அப்பொழுதுதான் அவர் பேர் வச்சாலும் பாடலை அருமையாக வரிகளை எழுதி விட்டார் இப்படி தான் இந்த பாடல் உருவானது என இளையராஜா கூறிய வீடியோ காணொளி தற்போது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.