கே.ஜி.எஃப் திரைப்படத்தில் ராக்கி பாய்க்கு அம்மாவாக நடித்த நடிகை இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா வெளிவந்த புகைப்படம்.!

வெள்ளித்திரையில் பல ஹிட்டடித்த திரைப்படங்களில் ஒரு முக்கியமான திரைப்படம் தான் கே.ஜி.எஃப் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக கன்னட நடிகர் யாஷ் நடித்திருந்தார் மேலும் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் நல்ல விமர்சனத்தையும் பெற்று அதிக வசூல் அளித்தது என்பது பலருக்கும் தெரிந்தது தான்.

மேலும் கே.ஜி.எஃப் இரண்டாம் பாகம் உருவாகி வந்த நிலையில் சமீபத்தில் தான் இந்த திரைப்படத்தின் பட பிடிப்பை பட குழு முடித்தார்கள் என அறிவிப்பு வெளிவந்தது.

இந்நிலையில் கே.ஜி.எஃப் திரைப்படத்தில் ராக்கி பாய்க்கு அம்மாவாக நடித்து அசத்தியவர் தான் அர்ச்சனா ஜொய்ஸ் இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகி விட்டார் மேலும் அந்த வகையில் தற்போது அவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் கே.ஜி.எஃப் படத்தில் ராக்கி பாய்க்கு அம்மாவாக நடித்த நடிகையா இது என கேள்வி எழுப்பி இந்த புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள்.