இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜயை வைத்து மாஸ்டர் என்னும் அக்ஷன் படத்தை இயக்கினார். இந்த படம் வெளிவந்து ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று நல்ல வசூலை பெற்று ஓடியது. இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கமலஹாசனிடம் ஒரு மிக ஆக்ஷன் கதையை கூற அந்த கதை கமல்ஹாசனுக்கும் பிடித்து இருக்கவே விக்ரம் என்னும் படம் உருவாகியது.
இந்த படம் முழுக்க ஒரு போதைப்பொருள் கடத்தல் கும்பல் அதனை கண்டுபிடிப்பது போன்றவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது படத்தில் கமலஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன் போன்ற பலரும் ஆக்ஷன் காட்சிகளில் பின்னி பெடலெடுத்திருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக இந்த படத்தில் கடைசி இரண்டு நிமிடங்கள் மட்டுமே வந்து சென்ற சூர்யா ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக கலக்கி இருந்தார் . மேலும் விக்ரம் படத்தின் அடுத்த பாகம் உருவாகும் எனவும் கூறியிருந்த நிலையில் அதில் அதிகம் சூர்யா தான் நடிப்பார் என்ற தகவல் வெளிவந்துள்ளது .
அதனால் அடுத்த பாகத்தில் சூர்யா போதை கும்பலை பிடிக்கும் ஒரு நல்ல அதிகாரியாக நடிப்பார் என்ற தகவலும் வெளிவந்திருந்த நிலையில் இதுகுறித்து சமீபத்தில் லோகேஷ் இடம் கேட்டபொழுது அவர் தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார் அவர் கூறியது. இந்த படத்தில் சூர்யாவை ஒரு முழுக்க முழுக்க கெட்ட கதாபாத்திரத்தில் தான் காட்டியுள்ளேன்.
கண்டிப்பாக விக்ரமின் அடுத்த பாகத்திலும் சூரிய ஒரு முழு வில்லனாக மட்டுமே இருப்பார் என்று கூறியிருந்தார். இந்த தகவலின்படி ரசிகர்கள் பலரின் சந்தேகம் தீர்ந்து உள்ளது. அடுத்த பாகத்தில் சூர்யாவின் முழு வில்லத்தனத்தை கண்டு ரசிக்கலாம் எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.