நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் எந்த முறைப்படி நடக்க உள்ளது தெரியுமா..! இயக்குனர் விக்னேஷ் சிவன் பதில்..!

nayanthara-vikki-1
nayanthara-vikki-1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழில் முதன்முதலாக ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார் இவ்வாறு இவர் நடித்த முதல் திரைப்படம் இவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்தது.

இதனால் நமது நடிகை முன்னணி நடிகையாக வலம்வந்தது மட்டுமல்லாமல் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் கௌரவமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஆரம்பத்தில் நடிகை நயன்தாரா கிளாமரான கதாபாத்திரத்துக்கு ஓகே சொன்னாலும் தற்போது சோலோ ஹீரோயினாக நடிக்கும் திரைப் படத்தில் நடிக்கவே அதிக அளவு ஆர்வம் காட்டி வருகிறார் இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க நயன்தாராவின் சொந்த வாழ்க்கையில் ஏகப்பட்ட காதல் சமாச்சாரம் இருந்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இந்நிலையில் சுமார் ஏழு வருடங்களாக நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து வருகிறார் இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமணம் வருகிற 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் நடக்க உள்ளது.

மேலும் இவர்களுடைய திருமணம் மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை நேரடியாக ரசிகர்கள் பார்க்கும் வகையில் பிரபல ott தலம் இவர்களுடைய திருமண நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதனிடையே  இயக்குனர் விக்னேஷ் சிவன் 9ஆம் தேதி திருமணம் முடிந்ததும் 11 ஆம் தேதி நானும் நயன்தாராவும் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி கொடுக்க உள்ளோம் என்று கூறினார்.

nayanthara-2.jpg
nayanthara-2.jpg

அப்போது பத்திரிகையாளர் ஒருவர் உங்கள் திருமணம் எந்த முறைப்படி நடக்க இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார் அதற்கு விக்னேஷ் சிவன் அவரை பார்த்து சிரித்துக் கொண்டே சென்றுவிட்டாராம்.