அஜித், விஜய்க்கு அப்புறம் தனுஷ் தான்.. வாத்தி படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

dhanush
dhanush

தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அனைவரது பார்வையும் தன் பக்கம் ஈர்த்து உள்ளவர் நடிகர் தனுஷ்.  இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்கள்  நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாக வெற்றி அடைந்தது.

அதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர், வாத்தி போன்ற படங்களில் தீவிரமாக நடித்து வந்தார். அதில் முதலாவதாக வாத்தி திரைப்படம் வெளியாகி உள்ளது. தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் நேற்று கோலாக்கலமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

படம் முழுக்க முழுக்க சென்டிமென்ட்,  நல்ல மெசேஜ், காமெடி மற்றும் ஆக்ஷன் கலந்த படமாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் நல்ல வரவேற்ப்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. வாத்தி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன், சமுத்திரக்கனி, இளவரசு, சாய்குமார் ஆடுகளம் நரேன், tanikella bharani என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே..

கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்திருந்தது படம் வெளிவந்து அனைத்து இடங்களிலும் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளதால் அடுத்தடுத்த நாட்களில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் தனுஷ் நடிப்பில் உருவான வாத்தி திரைப்படம் முதல் நாள் எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்து தகவல்களியாக உள்ளது.

அதன்படி தனுஷின் வாத்தி திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல விமர்சனத்தை பெற்று முதல் நாளில் 10 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளது. வருகின்ற நாட்களில் வார்த்தி படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையதளப் பக்கத்தில் பகிரப்பட்டு தீயாய் பரவி வருகிறது.