கல்லாப்பெட்டியை நிரப்பும் விக்ரமின் “கோப்ரா படம்” – 2 நாள் முடிவில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

cobra
cobra

சினிமா உலகில் இருக்கும் ஒவ்வொரு நடிகரும் சிறந்த படங்களை கொடுக்க அயராது நடிக்கின்றனர். அந்த வகையில் நடிகர் விக்ரம் சினிமா உலகில் பல்வேறு விதமான கெட்டப்புகளில் தனது திறமையை வெளிக்காட்டி படத்தை வெற்றி படமாக மாற்றுகிறார். இருப்பினும் இவர் அண்மை காலமாக நடிக்கும் படங்களின் கதைகள் சரியில்லாமல் போவதால் தோல்வியை சந்திக்கின்றன..

இதிலிருந்து தன்னை மாற்றிக்கொள்ள அஜய் ஞானமுத்துடன் கைகோர்த்து அவர் நடித்த திரைப்படம் தான் கோப்ரா இந்த படத்தில் விக்ரம் சுமார் ஒன்பது விதமான கெட்டப்புகளில் நடித்து அசத்தி உள்ளார். இந்த படத்தில் விக்ரம் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டாலும் கதைக்களம் லென்த்தாக இருப்பதால் ரசிகர்களிடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.

இதை அறிந்து கொண்ட பட குழு  படத்திலிருந்து இருபது நிமிட காட்சிகளை தூக்கி உள்ளதால் தற்பொழுது படம் விறுவிறுப்புக்கு  பஞ்சமில்லாமல் இருக்கும் என தெரிய வந்துள்ளது. இந்த படத்தில் விக்ரமுடன் கைகோர்த்து ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ், மிருணாளினி  ரவி, ரவீனா ரவி, மீனாட்சி கோவிந்தராஜன், ரோபோ ஷங்கர்.

மற்றும் பாபு ஆண்டனி, கே எஸ் ரவிக்குமார் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.  படம் தொடர்ந்து சூப்பராக ஓடிக் கொண்டிருப்பதால் வசூலிலும் பட்டையை கிளப்புகிறது முதல் நாளில் தமிழகத்தில் மட்டுமே 10 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது இதனைத் தொடர்ந்து இரண்டு நாள் முடிவில் கோப்ரா திரைப்படம் எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது  என்பது குறித்தும் தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி பார்க்கையில் தமிழகத்தில் மட்டும் 9 கோடி அள்ளி உள்ளதால் மொத்தமாக இரண்டு நாட்களில் மட்டுமே சுமார் 38 கோடி இந்த படம் வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. வருகின்ற நாட்கள் சனி, ஞாயிறு என்பதால் இந்த படம் நிச்சயம் இன்னும் நல்ல வசூலை அள்ளும் என படக்குழு கணித்துள்ளது.