தளபதி விஜய்யின் அப்பா எஸ் ஜே சந்திரசேகர் தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளர் என்பதால் இளம் வயதிலேயே விஜய்க்கு ஹீரோவாக பல திரைப்பட வாய்ப்புகள் குவிந்தன. அந்த வகையில் விஜய் ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களை தேர்வு செய்து நடித்து வெற்றி கண்டார்.
பின்பு ஒரு கட்டத்தில் ஆக்சன் படங்களை தேர்வு செய்து நடித்து ரசிகர்கள் மத்தியில் இளைய தளபதியாக வலம் வந்து எண்ணற்ற ரசிகர்களை தக்கவைத்துக் கொண்டார். தமிழ் சினிமாவில் இது வரை 65 திரைப்படங்கள் நடித்த முடித்துள்ள விஜய் தற்போது தனது 66-வது திரைப்படம் ஆன வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் இன்றும் விஜய் இளமையாகவே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடித்து வரும் அவரது வாரிசு திரை படத்திலிருந்து வெளியான போஸ்டரில் கூட விஜய் செம ஸ்மார்ட் ஆக இருக்கிறார். இப்படி தொடர்ந்து இன்றும் ரசிகர்களை கவர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வரும் விஜய் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படங்களில் ஒன்று போக்கிரி.
இந்தப் படத்தை இயக்குனர், நடனக் கலைஞர், நடிகருமான பிரபுதேவா இயக்கியிருந்தார். படத்தில் விஜயுடன் இணைந்து அசின், வடிவேலு, நாசர், பிரகாஷ்ராஜ் போன்ற பலரும் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்தில் விஜய் முதல் முறையாக போலீஸ் கெட்டப்பில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு விஜயின் மார்க்கெட் பெரிய அளவில் உயர்ந்து பல பெரிய பட்ஜெட் படங்களில் கமிட்டாகி நடித்தார். இந்த நிலையில் போக்கிரி படம் வெளிவந்து அப்பொழுது எவ்வளவு வசூல் வேட்டை நடத்தியது என்பது குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் சுமார் 54 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன.