தமிழ் சினிமா உலகில் அசைக்க முடியாத ஒரு ஹீரோவாக இருப்பவர் நடிகர் விஜய் இவர் தொடர்ந்து ஆக்சன் திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் அந்த படங்கள் ஒவ்வொன்றும் குறைந்தது 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்துகின்றன இதனால் அவரது மார்க்கெட் நான்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
இப்பொழுது கூட தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் கலந்த ஒரு திரைப்படம் ஆக உருவாகி வருகிறது இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.
வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு கோலாகலமாக வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் இரண்டாவது முறையாக இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்து தனது 67வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் அந்த படம் ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாக இருக்கிறதாம்..
மேலும் அந்த படத்தில் ஐந்தாறு வில்லன்கள் நடிகை இருப்பதாக கூறப்படுகிறது.. அதில் ஒரு சில முன்னணி நடிகர்களின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி 67 படம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அண்மைக்காலமாக தளபதி விஜய் தனது படத்திற்கு சம்பளமாக வாங்கும் தொகை அதிகரித்து வண்ணமே உள்ளது.
தற்பொழுது அவர் ஒரு படத்திற்கு 130 கோடி வாங்குவதாக சொல்லப்படுகிறது ஆனால் தளபதி 67 படத்திற்காக சம்பளம் குறைத்து நடிக்க இருக்கிறாராம் அதுவும் ஐந்து கோடியை குறைத்து 125 கோடி சம்பளமாக வாங்கி நடிகை இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது இது குறித்த ஆனால் அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை..