பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நட்சத்திரங்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா.? வாயடைத்துப் போன ரசிகர்கள்..

ponniyin-selvan
ponniyin-selvan

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இந்த படத்தினை லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் பல கோடி பொருட்ச அளவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார். இந்த படம் ஐந்து மொழிகளில் வருகின்ற 30ஆம் தேதி அன்று வெளியாக இருக்கிறது இந்நிலையில் தற்பொழுது இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 500 கோடி என்று கூறப்படும் நிலையில் அதன் நடித்த பிரபலங்களுக்கு எவ்வளவு சம்பளம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நட்சத்திரங்களில் அதிகம் சம்பளம் வாங்கியது விக்ரம் தான் என கூறப்படுகிறது அந்த வகையில் அவருக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இவருக்கு அடுத்ததாக தமிழ் சினிமாவிற்கு நீண்ட இடைவேளைக்குப் பிறகு ரீ என்ட்றி கொடுத்துள்ள ஐஸ்வர்யா ராய் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ரூபாய் 10 கோடி சம்பளம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது மூலம் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றான குந்தாவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை திரிஷாவுக்கு ரூபாய் 2 கோடியும், ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ஜெயம் ரவிக்கு ரூபாய் 8 கோடி சம்பளம் வழங்கும் கூறப்பட்டுள்ளது.

மேலும் பொன்னியின் செல்வன் கதையின் உண்மையான நாயகனான வந்திய தேவனின் கதாபாத்திரத்தின் அடித்துள்ள நடிகர் கார்த்தி ஐந்து கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளாராம். இவரை தொடர்ந்து சுந்தர சோழன் கேரக்டரில் நடித்துள்ள பிரகாஷ்ராஜுக்கு ஒரு கோடி ரூபாயும், பூங்குழலி கேரக்டரில் நடித்துள்ள நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கு ரூபாய் ஒன்றரை கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள பிரபலங்களான நடிகர் சரத்குமார், பார்த்திபன், பிரபு விக்ரம், பிரபு, ஜெயராம் ஆகியோர்களுக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தின் ரிலீஸ்க்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார்கள்.