விடுதலை படத்தின் ஆறு நாட்கள் வசூல் எவ்வளவு தெரியுமா.? இதோ முழு விவரம்.!

viduthalai

இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் சூரி கூட்டணியில் உருவாகி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று வரும் திரைப்படம் தான் விடுதலை. சூரி கதாநாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷின் தங்கச்சியான பவானி ஸ்ரீ கதாநாயகியாக நடித்துள்ளார் மேலும் முதல் பாகம் மட்டும் வெளிவந்த நிலையில் எப்பொழுது இரண்டாம் பாகம் வெளிவரும் என பல ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் இரண்டாம் பாகம் இன்னும் நான்கு மாதத்திற்குள் வெளியாகும் எனவும் தகவல் கசிந்துள்ளது இதற்கிடையில் இரண்டாம் பாகத்தில் ஒரு சில காட்சிகள் மீதம் உள்ளதாகவும் அதை சரியாக 10 நாட்களுக்குள் எடுத்து முடிக்க வேண்டும் என்று வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது மேலும் இந்த திரைப்படத்தின் வசூல் நிலவரம் என்ன என்பது பற்றி ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

அதன்படி பார்த்தால் விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி ஆறு நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் வசூல் இதுவரை ரூ.26 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தின் வசூல் இன்னும் அதிகமாக வாய்ப்பு இருக்கிறது எனவும் பல பிரபலங்களும் கூறி வருகிறார்கள்.

bhavani sri
bhavani sri

இதனை தொடர்ந்து விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் வெற்றிமாறன் பல திருப்பங்களை மிகவும் பயங்கரமாக செய்துள்ளார் எனவும் கூடிய சீக்கிரம் அந்த ஒரு சில காட்சிகளை எடுத்து விட்டால் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்து விடும் எனவும் கூறப்படுகிறது.மேலும் முதல் பாகத்தின் வசூலை அறிந்த ஒரு சில ரசிகர்கள் இன்னும் அதிகமாக வசூல் செய்வதற்கு அதிகம் வாய்ப்பு இருக்கிறது என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.