சூர்யாவை தொடர்ந்து நடிகர் கார்த்தி திரை உலகில் முதலில் உதவி இயக்குனராக தனது பயணத்தை ஆரம்பித்தாலும் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்தன அந்த வகையில் பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் கார்த்தி ஹீரோவாக நடித்த அறிமுகமானார். அந்த படத்தை அடுத்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அந்த படங்களும் மக்கள் மற்றும் ரசிகர்களை கொண்டாட வைக்கிறது அதன் காரணமாக அந்த படங்களும் வசூல் வேட்டை நடத்துகின்றன. கார்த்தி கடைசியாக நடித்த பொன்னியின் செல்வன், விருமன் போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக எஸ்பி மித்ரன் உடன் கைகோர்த்து கார்த்தி நடித்த திரைப்படம் சர்தார்.
இந்த திரைப்படம் ஒரு சமூக அக்கறை உள்ள ஒரு திரைப்படமாக இருந்ததால் பலருக்கும் பிடித்து போய் உள்ளது.. மேலும் தொடர்ந்து நல்ல விமர்சனத்தை இந்த படம் பெற்று வருவதன் காரணமாக நல்ல வசூலையும் அள்ளி உள்ளது சர்தார் திரைப்படத்தில் கார்த்தி உடன் கைகோர்த்து ராசி கண்ணா, முனீஸ் காந்த், லைலா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.
இந்த படம் தொடர்ந்து சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் சர்தார் திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் உலகம் முழுவதும் இதுவரை சர்தார் திரைப்படம் 55 கோடி வசூல் அள்ளி இருப்பதாக கூறப்படுகிறது.
வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது இதனால் படக்குழு மற்றும் கார்த்தியும் செம சந்தோஷத்தில் இருக்கின்றனர். சர்தார் திரைப்படத்தை எதிர்த்து சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் நன்றாக ஓடினாலும் சர்தார் படத்திற்கு இணையாக வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த தீபாவளியில் சர்தார் படத்தின் கையே ஓங்கி இருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.