சினிமா உலகில் எப்போதுமே போட்டிகள் இருக்கும் அந்த வகையில் எம்ஜிஆர் சிவாஜி ஆகியவர்களை தொடர்ந்து ரஜினி கமலும் சினிமா உலகில் தொடர்ந்து போட்டி போட்டுக் கொண்டு நடித்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடைசியாக அண்ணாத்த திரைப்படத்தில் நடித்தார் அந்த படம் சுமாரான வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து தற்பொழுது தனது 169 ஆவது திரைப்படமான ஜெயிலர் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படம் ஜெயில் சம்பந்தப்பட்ட படமாக உருவாகி வருகிறது.
இதேபோல உலகநாயகன் கமலஹாசன் கடைசியாக நடித்த விக்ரம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பியது. அதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் இப்பொழுது நடித்து வரும் திரைப்படம் இந்தியன் 2 இந்த படத்தின் ஷூட்டிங் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டிருந்தாலும் சில பிரச்சனைகள் காரணமாக அப்பொழுது நிறுத்தப்பட்டது.
தற்பொழுது மீண்டும் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளது. உலகநாயகன் கமலஹாசன் அமெரிக்கா சென்று ஒரு வழியாக திரும்பி தற்போது இந்த படத்தில் கமிட் ஆகியுள்ளார் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கிறதாம்.. இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினி கமல் இருவரும்.
இப்பொழுது நடித்து வரும் படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது. கமல் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியன் 2 படத்திற்காக சுமார் 150 கோடி சம்பளம் வாங்க இருப்பதாக கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெய்லர் திரைப்படத்திற்காக சுமார் 70 கோடி தான் சம்பளம் வாங்குகிறார். இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. அதற்கு காரணமும் இருக்கிறது.
கடைசியாக இவர் நடித்த இரண்டு மூன்று திரைப்படம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய அளவில் வெற்றி பெறவில்லை அதனால் ரஜினியே தானாக முன்வந்து ஜெயிலர் படத்திற்கு தனது சம்பளத்தை குறைத்துள்ளார் என கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை..