அடேங்கப்பா.. RRR திரைப்படம் உலக அளவில் முதல்நாளில் மட்டும் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.? ஆச்சிரியத்தில் இந்திய சினிமா.

RRR
RRR

தெலுங்கில் பிரமாண்ட படங்களை இயக்கி வெற்றி கொண்டு வருபவர் எஸ்எஸ் ராஜமௌலி. கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களில் எதிர்பார்க்காத ஒரு வசூலை அள்ளிய நிலையில் சிறு இடைவெளிக்குப் பிறகு ஜூனியர் என்டிஆர், ராம் சரணை வைத்து எஸ்எஸ் ராஜமௌலி இயக்கி உள்ள திரைப்படம் தான் RRR.

இந்த திரைப்படம் பல்வேறு தடைகளை தகர்த்தெறிந்து ஒரு வழியாக நேற்று கோலாகலமாக உலக அளவில் ரிலீஸ் ஆகியது ரசிகர்கள் பாகுபலி படத்தைவிட RRR படம் சிறப்பாக இருக்கும் எனக் கருதினார்கள். அதற்கு ஏற்றார் போல நேற்று வெளியாகி ரசிகர்களை கொண்ட வைத்துள்ளது. ரசிகர்கள் எதிர்பார்த்த போல ஆக்ஷன், சென்டிமென்ட் போன்ற சீன்கள் வியக்க வைக்கும் இருந்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக ஜூனியர் என்டிஆர், ராம்சரண், சமுத்திரகனி போன்றவர்களின் நடிப்பு பட்டைய கிளப்பும் வகையில் இருந்தது. RRR படம் 3 மணி நேரம் இருந்தாலும் ஒவ்வொரு சீனுக்கு  சிறப்பாகவும் அடுத்து என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியாத அளவிற்கு விறுவிறுப்பாக படத்தை நகர்த்தி உள்ளதால் 3 மணி நேரம் போவதே தெரியவில்லை அந்த அளவிற்கு படம் இருப்பதாக படத்தை பார்த்த மக்கள் மற்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சொல்லப்போனால் பாகுபலி படத்தின் விமர்சனத்தை இந்த படத்தின் விமர்சனம் சிறப்பாக உள்ளது. மேலும் மக்கள் ரசிகர்கள் தொடங்கிய சினிமா பிரபலங்களும் இந்த படத்தை பார்த்து வாயடைத்து போய் உள்ளனர் அந்த அளவிற்கு RRR படம் சூப்பராக எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் கூட பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் ராஜமௌலின் RRR படத்தைப் பார்த்துவிட்டு மிரண்டு போயுள்ளாராம்.

அதேசமயம் இந்த படத்தில் நடித்த நடிகர்கள் படக்குழு மற்றும் ராஜமௌலி ஆகியவர்களுக்கு வாழ்த்துகளையும் கூறி உள்ளார் குறிப்பாக ராஜமௌலியை மகாராஜா மௌலி என அழைத்துள்ளார். இப்படி இருக்கின்ற நிலையில் RRR திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து தற்போது தகவல் கிடைத்துள்ளது.

உலக அளவில் இந்த திரைப்படம் முதல் நாளில் மட்டும்  228 கோடி அள்ளி உள்ளது. தமிழகத்தில் மட்டும் குறிப்பாக 9.20 கோடி அள்ளி உள்ளது. தெலுங்கில் 107.2 கோடி அள்ளி உள்ளது. ஹிந்தியில் 22.6 கோடி,வெளிநாடுகளில் 69 கோடி போன்ற முக்கிய இடங்களில் நல்ல வசூலை ஈட்டியுள்ளது.முதல் நாளில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்த புதிய சாதனை படைத்துள்ளது ராஜமௌலியின் RRR திரைப்படம்.