நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவிற்கு தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் இப்பொழுது கூட இயக்குனர் முத்தையாவுடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து விருமன் திரைப்படத்தில் நடித்தார் இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான வரவேற்பை பெற்று சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது.
விருமன் திரைப்படம் முழுக்க முழுக்க கிராமத்து கதையை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளது இந்த படத்தில் ஆக்ஷன், சென்டிமென்ட், காமெடி என அனைத்தும் சூப்பராக ஒர்க் அவுட்டாகி உள்ளது படத்தை பார்த்து அனைவரும் படத்தை பார்த்து என்ஜாய் பண்ணி வருகின்றனர் இதனால் அடுத்தடுத்த நாட்களிலும் இந்த படத்தைப் பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இதனால் திரையரங்குகள் அனைத்தும் ஹவுஸ் உள்ளாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த படத்தில் கார்த்தி உடன் கைகோர்த்து அதிதி சங்கர், பிரகாஷ்ராஜ், சரண்யா பொன்வண்ணன், மைனா நந்தினி, மனோஜ், சிங்கம் புலி, சூரி, மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இந்த படம் மூன்று நாள் முடிவில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தற்பொழுது பார்க்க இருக்கிறோம். கார்த்தியின் விரும்பும் திரைப்படம் முதல் நாளில் 8 கோடியும் இரண்டாவது நாளில் 8.45 கோடியும் வசூல் செய்திருந்தது மூன்றாவது நாளில் பெருமந்த திரைப்படம் சுமார் 10 கோடி வசூல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது.
மூன்று நாட்களையும் சேர்த்து வைத்து பார்க்கையில் மொத்தமாக சுமார் 25 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன. இதனால் படக்குழுவும் சரி, நடிகர் கார்த்தி ரசிகர்களும் செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். இருப்பினும் அதிகாரப்பூர்வமாக சொல்ல வில்லை.. இருந்தாலும் இந்த தகவல் தற்போது தீயாய் பரவி வருகிறது.