ரஜினி நடிப்பில் வெளியான படையப்பா திரைப்படம் எவ்வளவு வசூல் செய்தது தெரியுமா.?

rajini

தமிழ் திரையுலகில் நிறைய திரைப்படங்களில் நடித்து தற்பொழுது பிரபலமான நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் நிறைய திரைப்படங்களில் நடித்து பல ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இவரது நடிப்பில் தற்போது அண்ணாத்த என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை பெறும் என கூறப்படுகிறது பொதுவாகவே இவரது நடிப்பில் வெளியாகும் பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெறுவது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்திருக்கும்.

அந்த வகையில் இவரது நடிப்பில் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் படையப்பா இந்த திரைப்படத்தில் ரஜினி கதாநாயகனாகவும் ரம்யா கிருஷ்ணன் வில்லியாகவும் நடித்தது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது என்று தான் கூற வேண்டும் அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் நீலாம்பரி என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்த பொழுது ரசிகர்களால் இவர் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கினார்.

இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பொழுது அதிகம் வசூல் செய்து நல்ல விமர்சனத்தை பெற்றதாக கூறப்படுகிறது இந்நிலையில் இந்0த திரைப்படம் எவ்வளவு வசூல் செய்தது என்பது பற்றி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

rajini
rajini

ஆம் இந்த திரைப்படம் தென்னிந்தியாவில் மட்டுமே 50கோடி எனவும் மொத்த வசூல்58 கோடி என தகவல் கிடைத்துள்ளது இருந்தாலும் இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் தமிழ் திரையுலகில் இதைப்பற்றி தான் பேசி வருகிறார்கள் என கூறப்படுகிறது.