தமிழ் சினிமா உலகில் அண்மைகாலமாக நல்ல நல்ல படங்கள் வெளிவந்து வெற்றி பெறுகின்றன இருந்தாலும் பிரம்மாண்டமான வசூலை அள்ளவில்லை.. தமிழ் சினிமாவில் கடைசியாக வெளியாகி அதிக வசூல் அள்ளிய திரைப்படம் என்றால் அது கமலின் விக்ரம் திரைப்படம் தான் இந்த படம் 410 கோடிக்கு மேல் அள்ளி அசத்தியது.
இந்த படத்தை தொடர்ந்து தற்பொழுது வசூல் வேட்டை நடத்தி வரும் ஒரே திரைப்படம் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் தான் இந்த படம் ஒரு வரலாற்று நாவலை மையமாக வைத்த படம் உருவாகி இருப்பதால் மக்கள் மற்றும் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு இந்த படத்தை பார்த்து வருகின்றனர்.
படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்த காரணத்தினால் நல்ல விமர்சனத்தை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது அதன் காரணமாக இந்த படத்தின் வசூலும் அதிகரித்த வண்ணமே இருக்கிறது நான்கு நாட்கள் முடிவில் 250 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது நேற்றுடன் ஐந்து நாட்கள் முடிவில் இந்த திரைப்படம் 270 கொடி அள்ளி உள்ளது.
போகின்ற நிலைமையில் பார்த்தால் இந்த திரைப்படம் செய்யும் 500 கோடி அள்ளி ஒரு புதிய சாதனை படைக்கும் என தெரிய வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் ஐந்து நாட்கள் முடிவில் தமிழகத்தில் எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி பார்க்க தமிழகத்தில் மட்டும் இதுவரை பொன்னியின் செல்வன் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு சில படங்கள் மட்டுமே தமிழ்நாட்டில் 100 கோடி வசூல் அள்ளி இருக்கிறது அந்த லிஸ்டில் தற்பொழுது பொன்னியின் செல்வன் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.