நடிகர் தனுஷ் சினிமாவில் அசுரன், கர்ணன், வடசென்னை போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர். அதன்பின் இவர் நடிப்பில் வந்த ஜகமே தந்திரம், மாறன் போன்ற படங்கள் எதிர்பார்த்தபடி வெற்றி அடையவில்லை. இதை உணர்ந்து கொண்ட தனுஷ் அடுத்தடுத்து சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து நானே வருவேன், திருச்சிற்றம்பலம், வாத்தி போன்ற படங்களில் கமிட் ஆகி நடித்து வந்தார்.
இதில் முதலாவதாக மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகி வந்த திருச்சிற்றம்பலம் படத்தின் ஆடியோ லான்ச் வெளியாகியது அப்போது சிலர் படத்தைப் பற்றி பேசியது படத்தின் எதிர்பார்ப்பை பெரிய அளவில் ஏற்படுத்தி உள்ளது. மேலும் அனிருத் இசையில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கண்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி திருச்சிற்றம்பலம் படம் திரையரங்கில் வெளியாகி வெற்றி நடை கொண்டு வருகிறது. இந்தப் படத்தில் தனுஷ் உடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராசி கண்ணா, பிரகாஷ் ராஜ், பாரதிராஜா போன்ற பல நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.
ஒவ்வொருவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து அசத்தி உள்ளதால் படம் நல்ல விமர்சனங்கள் மற்றும் வசூலை அள்ளி வருகின்றன. தொடர் தோல்வியை கொடுத்து வந்த தனுஷ்க்கு திருச்சிற்றம்பலம் படம் கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படம் வெளியாகி முதல் நாளிலே எதிர்பாராத அளவு வசூலை பெற்ற நிலையில் அடுத்தடுத்த நாட்களில் நல்ல வசூலை அள்ளும் இந்த படம். இந்த நிலையில் திருச்சிற்றம்பலம் படம் வெளியாக இரண்டு நாள் முடிவில் 13 கோடி வசூல் அள்ளி உள்ளது. இது படத்தின் வெற்றிக்கு நல்ல ஆரம்பமாக அமைந்துள்ளது.
.