அண்மைக்காலமாக இளம் இயக்குனர்கள் சிறந்த படங்களை கொடுத்து அசத்துகின்றனர் இதனால் அவர்கள் இந்திய அளவில் பிரபலம் அடைவதோடு மட்டுமல்லாமல் அடுத்தடுத்து டாப் நடிகர்களை வைத்து படங்களை இயக்குகின்றனர். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், ஹச். வினோத், மாரி செல்வராஜ் போன்றவர்கள் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து அசத்தி வருகின்றனர்.
குறிப்பாக மாறி செல்வராஜ் குறைந்த பட்ஜெட்டில் சிறப்பான படங்களை கொடுத்து மக்களை கவர்ந்திழுத்துள்ளார். அந்த வகையில் பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்கள் அடங்கும் இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக மாறி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாஸில், கீர்த்தி சுரேஷ் என மிகப் பெரிய ஒரு நட்சத்திர பட்டாளத்தையே..
வைத்து மாமன்னன் என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் இவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகிய சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கர்ணன். தனுஷ் உடன் கைகோர்த்து ரதிஷா விஜயன், லால், நட்டி நடராஜ் மற்றும் பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.
இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தியதோடு கர்ணன் திரைப்படத்திற்கு ஏகப்பட்ட விருதுகள் கிடைத்தது இந்த படம் மாரி செல்வராஜுக்கும் சரி, தனுஷ்கும் சரி சிறந்த படமாக அவரது கேரியரில் பார்க்கப்படுகிறது.
இப்படி இருக்க இந்த படத்தை இயக்கியதற்காக மாரி செல்வராஜ் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது. கர்ணன் திரைப்படத்தை இயக்கியதற்காக மாரி செல்வராஜ் சுமார் 50 லட்சம் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.