தளபதி 67 படத்திற்காக இயக்குனர் “லோகேஷ் கனகராஜ்” வாங்கயுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா.? வெளியே கசிந்த உண்மை தகவல்.!

lokesh
lokesh

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டிருப்பவர் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதுவரை  மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இதனால் லோகேஷின் சினிமா பயணம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

பல வெற்றி படங்களை கொடுத்தாலும் கடைசியாக கமலை வைத்து எடுத்த விக்ரம் திரைப்படம் தான் அதிக வசூல் செய்த திரைப்படமாக இருக்கிறது. இந்தப் படத்தின் திரைக்கதை சற்று வித்தியாசமாக இருந்ததால் மக்களும் ரசிகர்களும் இந்த படத்தை பார்த்து கொண்டாடினர். மேலும் விக்ரம் படத்தில் கமலுடன் இணைந்து பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் சிறப்பான ரோலில் நடித்து அசத்தியது.

ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது இது இந்த படத்திற்கு பக்கபலமாக இருந்ததால் தமிழ்நாட்டையும் தாண்டி மற்ற இடங்களிலும் நல்ல வரவேற்பு பெற்றது வசூலிலும் அடித்து நொறுகியது விக்ரம் திரைப்படம் தற்போது வரை சுமார் 420 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படத்தை உலகநாயகன் கமலஹாசன் தயாரித்து நடிக்கவும் செய்ததால் இந்த படத்தின் மூலம் அவருக்கு ஏகப்பட்ட கோடி லாபம் கிடைத்துள்ளது இதனால் கமல் செம சந்தோஷத்தில் இருக்கிறார். இப்படி இருக்கின்ற நிலையில் விக்ரம் படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜயை வைத்து தளபதி 67 படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்தின் சூட்டிங் டிசம்பரில் தொடங்கும் என தெரிய வருகிறது. தளபதி 67 படத்தை இயக்குவதற்காக லோகேஷ் எவ்வளவு சம்பளம் வாங்க உள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் தளபதி 67 திரைப்படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சுமார் 25 கோடி சம்பளம் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது.  இதனை வலைப்பேச்சு youtube நிகழ்ச்சியில் பகிர்ந்தனர்.