“மாநாடு” திரைப்படம் நேற்று வரை அள்ளிய தொகை எவ்வளவு தெரியுமா.? வியப்பில் டாப் நடிகர்கள்.

maanaadu
maanaadu

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வெற்றி கண்டு வரும் திரைப்படம் மாநாடு. இந்த திரைப்படம் பலருக்கும் திருப்புமுனை படமாக அமைந்துள்ளது ஆம் சிம்பு, வெங்கட் பிரபு மற்றும் படத்தில் நடித்த பலருக்கும் இது ஒரு முக்கிய படமாக பார்க்கப்படுகிறது.

நடிகர் சிம்பு மாநாடு திரைப் படத்திற்கு முன்பாக பல்வேறு பிரச்சனைகளில் சந்தித்திருந்தார் அதை உடைத்தெறியும் வகையில் இந்த திரைப்படம் அமைந்ததால் சிம்பு செம்ம சந்தோஷத்தில் இருக்கிறார். மேலும் இவர் நடிப்பில் பல்வேறு திரைப்படங்கள் உருவாகின்றன அந்த திரைப்படங்ககளில் தற்போது சந்தோஷமாக நடித்து வருவதாக தெரியவருகிறது.

மாநாடு படம் சிம்பு கேரியரில் இது ஒரு திருப்புமுனை படம் என்பது அவரும் அவரது ரசிகர்களும் அடித்து சொல்வார்கள் அந்த அளவிற்கு இந்த திரைப்படமாக வந்துள்ளது இந்த திரைப்படத்தில் சிம்புவுடன் கைகோர்த்து எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஏ. சந்திரசேகர், ஒய் ஜி மகேந்திரன், மனோஜ், கருணாகரன், பிரேம்ஜி  போன்ற பலரும் நடித்து அசத்தி உள்ளனர். அனைவரின் நடிப்பும் ரசிக்கும் படி இருந்தன.

டாப் நடிகர்கள் படம் ரசிகர்களுக்காகவே முதல் இரண்டு நாட்களில் நல்லதொரு வசூல் வேட்டை நடத்துவது ஆனால் நாட்கள் செல்ல செல்ல மக்கள் கூட்டம் வந்தால் அந்த திரைப்படம் சிறப்பாக இருப்பதாக் ஆர்த்தம். அதை சீரும் சிறப்புமாக செய்து வந்துள்ளது மாநாடு தற்போதும் மக்கள் கூட்டம் அலை கடலென திரையரங்கை பக்கம் நாடி வருகின்றன.

இதனால் இந்த படத்தின் வசூல் தாறுமாறாக எகிறிய வண்ணமே இருந்தன நேற்று வரை மாநாடு திரைப்படம் சுமார் 47 கோடி அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது உலக அளவில் இந்த திரைப்படம் இதுவரை 65 கோடி வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.