தமிழ் சினிமாவில் தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு நிறைய திரைப்படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி அதன் பின்பு ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர் தான் ராகவா லாரன்ஸ்.
இவரது நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் ருத்ரன் இந்த திரைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் நல்ல விமர்சனம் தந்தாலும் ஒரு பக்கம் இந்த திரைப்படத்திற்கு கலவையான விமர்சனம் மட்டுமே வருகிறதாம்.இந்த திரைப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
அதனை தவிர்த்து பார்த்தால் வில்லனாக நடிகர் சரத்குமார் ,பூர்ணிமா பாக்கியராஜ் மற்றும் நாசர்,காளி வெங்கட் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.மேலும் இந்த திரைப்படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு என்பது பற்றி ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதன்படி பார்த்தால் முதல் நாளில் சுமார் பத்து கோடி வரை வசூல் செய்த இந்த திரைப்படம் கடந்த மூன்று நாட்களில் ரூ.15 கோடி வரை தான் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.முதல்நாள் வசூல் நன்றாக இருந்த நிலையில் இரண்டாவது நாள் வசூல் அப்படியே சரிய ஆரம்பித்து விட்டது என்றே கூறலாம் ருத்ரன் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ராகவா லாரன்ஸ் இன்னும் ஒரு சில திரைப்படங்களிலும் நடிக்க இருக்கிறார்.
அந்த வகையில் பார்த்தால் கண்டிப்பாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்திலோ அல்லது எப்பொழுது வேணாலும் அவரது திரைப்படத்தில் நடிக்க உறுதியாக நடிகர் ராகவா லாரன்ஸ் இருக்கிறார் எனவும் சமீபத்தில் தகவல் வெளியானது.இதனை தொடர்ந்து பார்த்தால் இந்த வசூல் செய்தியை அறிந்த ரசிகர்கள் பலரும் இன்னும் ஒரு சில நாட்களில் வசூல் அதிகமாவதற்கு வாய்ப்பும் இருக்கிறது எனவும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.