நடிகர் தனுஷ் “திருச்சிற்றம்பலம்” படத்தில் நடித்ததற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயனை விட கம்மியா…

dhanush
dhanush

நடிகர் தனுஷ் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் இவர் நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம் இந்த படம் வருகின்ற 18ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை ஜவகர் மித்திரன் இயக்கி உள்ளார்.

இந்த படத்தில் தனுஷ் உடன் கைகோர்த்து நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், பாரதிராஜா, ராசி கண்ணா, பிரகாஷ்ராஜ், முனிஷ்காந்த் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து உள்ளனர். இந்த படம் முழுக்க முழுக்க அப்பா மகன் காதல் செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த ஒரு திரைப்படமாக உருவாகியுள்ளது இந்த படத்தில் தனுஷ் தனது மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

இந்த படம் அனைவரது மத்தியிலையும் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் கூட திருச்சிற்றம்பலம் படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற்றது. இந்த படம் அனைவரையும் கவர்ந்து விழும்படி இருக்கும் என சொல்லி இருந்தார்கள். இப்படி இருக்கின்ற நிலையில் திருச்சிற்றம்பலம் படத்திற்காக நடிகர் தனுஷ் எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி பார்க்கையில் நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்திற்காக சுமார் 15 கோடி சம்பளம் வாங்கி உள்ளாராம். இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது சினிமாவுலகில் தொடர் வெற்றி படங்களை கொடுக்கும் தனுஷ்க்கு இவ்வளவு தான் சம்பளமா.. இவருக்கு பின்னாடி வந்த சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி போன்றவர்கள் எல்லாம் அதிகம் சம்பளம் வாங்குகின்றனர் சிவகார்த்திகேயன் தற்போது ஒரு படத்திற்கு 25 கோடி சம்பளம் வாங்குகிறார் விஜய் சேதுபதி ஜவான் படத்தில் நடிப்பதற்காக சுமார் 30 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

மேலும் அஜித் விஜய் ரஜினி போன்றவர்கள் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகின்றனர்.  சினிமா உலகில் பல வருடங்களாக நடித்து வரும் தனுஷுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் சினிமாவில் தொடர் வெற்றியும் இருந்து சம்பளத்தை உயர்த்தாமல் 15 கோடி வாங்குவது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.