தல அஜித் கடைசி 5 திரைபடத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா.? விவரம் இதோ.

ajith
ajith

தமிழ் சினிமாவில் மாஸான கதைகளுக்கு மிகவும் பேர்போன நடிகர்களில் ஒருவராக வருபவர் தல அஜித். இவருக்கு வசனங்கள் மற்றும் சண்டைக் காட்சிகள் மிகவும் பொருந்தும் என பல ரசிகர்கள் கூறுவது வழக்கம் அது தன் உண்மையும் கூட. இவர் தமிழ் சினிமாவில் பல மாஸான படங்களை கொடுத்துள்ளார் அத்தகைய படங்களை தொடர்ந்து தற்போது அடுத்த ஒரு மாஸான திரைப்படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

அந்த வகையில் தற்போது ஹச். வினோத்துடன் இணைந்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது அதற்கு முக்கிய காரணம் அஜித் மற்றும் ஹச். வினோத் கூட்டணியை மிகப் பெரிய அளவில் வெற்றி கூட்டணியாக ஏற்கனவே அமைந்து விட்ட நிலையில் இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பும் சற்று அதிகரித்துள்ளது.

இப்படத்தை மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் எடுக்க தற்போது இவர்களுடன் போனிகபூர் அவர்களும் இணைந்துள்ளதால்  இப்படத்தின் எதிர்பார்ப்பு  கூடுதல் அதிகரித்துள்ளது.

இருப்பினும் இப்படம் தற்போது 50% தான் முடிவடைந்துள்ளது. மீதி படப்பிடிப்பு அரசு அனுமதியுடன் எடுக்கப்படும் என தெரிய வருகிறது. இந்த நிலையில் அஜித் நடிப்பில் கடைசியாக வந்த 5 திரைப்படங்களுக்காக அஜித் அவர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்ற செய்தி வெளிவந்துள்ளது.

1.வலிமை = 50 கோடி, 2.நேர்கொண்ட பார்வை = 40 – 50 கோடி, 3.விசுவாசம் 40 – 50 கோடி, 4.விவேகம் 40 – 50 கோடி, 5.வேதாளம் = 40 கோடி.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகாராக விளங்கும் ரஜினி,விஜய்  ஆகியோரை விட குறைந்த சம்பளமே வாங்குகிறார்.