முதல் நாள் சென்னை ஏரியாவில் மட்டும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ” படம் எவ்வளவு வசூல் செய்தது தெரியுமா.?

surya
surya

நடிகர் சூர்யா சமீபகாலமாக சிறப்பான படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார். சூர்யா ஜெய்பீம், சூரரைப்போற்று ஆகிய திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் எதற்கும் துணிந்தவன். இந்த திரைப்படத்தை தனக்கே உரிய பாணியில் பாண்டியராஜ் எடுத்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது இந்த திரைப்படம் தமிழில் தாண்டி பல்வேறு மொழிகளில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படமும் செண்டிமென்ட், ஆக்ஷன் என அனைத்தும் கலந்த இருப்பதால் ரசிகர்கள் தாண்டி பெண்களை குறிப்பாக கவர்ந்து இழுத்துள்ளது. படம் சிறப்பான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூலில் பெரிய அள்ளவில்லை என கூறப்படுகிறது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சூர்யாவின் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி உள்ளதால் மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டை நடத்தும் என்பதே பல சினிமா பிரபலங்கள் என் கருத்தாக இருந்தது ஆனால் தற்போது அதை தவறிவிட்டு  உள்ளது  எதற்கும் துணிந்தவன் திரைப்படம்.

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் முதல் நாள் சென்னையில் நிலவரம் மட்டும் தற்போது தெரியவந்துள்ளது அதன்படி பார்க்கையில் சென்னையில் மட்டும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் முதல் நாளில் சுமார் 62 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது.இச்செய்தி சினிமா பிரபலங்களையும், ரசிகர்களையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சூர்யா படம் வெளிவந்தது நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளதால் போகப்போக இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என்பது மக்கள் மற்றும் ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது இருப்பினும் முதல் நாளில் ஒரு டாப் நடிகரின் படம் 62 லட்சம் பள்ளி உள்ளது ஏமாற்றத்திற்குரிய ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது.