நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் சினிமா உலகில் பல்வேறு விதமான வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த படங்களும் இவருக்கு வெற்றி மேல் வெற்றியை கொடுக்கின்றன அண்மை காலமாக நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன், சூரறை போற்று, ஜெய் பீம் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன.
அதனைத் தொடர்ந்து இப்பொழுது இயக்குனர் பாலா உடன் கைகோர்த்து வணங்கான் என்ற திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக 18 வயது நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். படத்தின் ஷூட்டிங் தற்போது விருவிருப்பாக போய்க்கொண்டிருக்கிறது
இதை வெற்றிகரமாக முடித்துவிட்டு நடிகர் சூர்யா அடுத்ததாக தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறனுடன் கைகோர்த்து வாடிவாசல் படத்தில் இணைவார் என சொல்லப்படுகிறது.அதன்பின் சிறுத்தை சிவா உடன் ஒரு படமும் பண்ண உள்ளாராம். படங்களில் ஒரு பக்கம் பிஸியாக நடித்துக் கொண்டிருக்க மறுபக்கம் 2d என்டர்டைன்மென்ட் நிறுவனம் மூலம் சூப்பரான படங்களை தயாரித்து வருகிறார்.
அந்த வகையில் தமிழில் சூப்பர் ஹிட் அடித்த சூரறை போற்று படத்தின் ரீமேக் ஹிந்தியில் எடுக்கப்பட உள்ளது. இந்த படத்தை 2d என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது அந்த படத்தில் ஹீரோவாக அக்ஷய்குமார் நடிக்கிறார் சூர்யாவும் ஒரு சின்ன ரோலில் தோன்றுவார் என கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சூர்யா நான் ஏன் சினிமாவிற்கு வந்தேன் என்பது குறித்து பேட்டியில் கூறியுள்ளார்.
நான் என்னோட நண்பர்களுடன் நடிக்கப் போகிறேன் என்று சொன்ன பொழுது பெற்றோர்கள் நம்பாமல் சிரித்தனர் பின் நேருக்கு நேர் என்கின்ற படத்தின் கமிட்டானேன் அந்த படத்திற்காக எனக்கு 50,000 ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டது அப்பொழுது எங்களுக்கு 25 ஆயிரம் கடன் இருந்தது அந்த காசுக்காக தான் நான் நடிக்க வந்தேன் என குறிப்பிட்டார்.