பிதாமகன் படத்தில் நடிக்க சூர்யா, விக்ரம் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

pithamagan
pithamagan

Pithamagan : எந்த ஒரு இயக்குனரும் எடுக்காத கதையை படமாக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார் இயக்குனர் பாலா. இவர் இதுவரை சேது, பிதாமகன், பரதேசி அவன் இவன், நந்தா, நான் கடவுள் என பல வெற்றி படங்களை கொடுத்து வந்த இவர் தற்பொழுது அருண் விஜயை வைத்து வணங்கான் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்.

வணங்கான் படத்தில் முதலில் சூர்யா தான் நடிக்க இருந்தது ஆனால் சூர்யாவுக்கும்  இயக்குனர் பாலாவுக்கும் இடையே பிரச்சனை வர சூர்யா தனது தயாரிப்பு நிறுவனம் மற்றும் தான் நடித்துக் கொண்டிருப்பதை நிறுத்திக் கொள்வதாகவும் கூறி வெளியே வந்தார். சூர்யாவுக்கு பதில் அருண் விஜயை போட்டு படத்தை வெற்றிகரமாக எடுத்து வருகிறார்.

அண்மையில் கூட படத்தின் போஸ்டர் வெளிவந்து மிரட்டியது. அதில் அருண் விஜய்  ஒரு கையில் பிள்ளையார், இன்னொரு கையில் பெரியார் வைத்து இருப்பார். இந்த நிலையில் 2003  பாலா இயக்கத்தில் உருவான பிதாமகன் படம். படம் முழுக்க முழுக்க ஆக்சன், காமெடி, எமோஷனல் என அனைத்தும் கலந்து இருந்ததால்..

வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பு பெற்று  அதிக நாட்கள் ஓடியதோடு மட்டுமல்லாமல் சுமாரான வசூல் அள்ளியது. பிதாமகன் படத்தில் சூர்யா, விக்ரம், லைலா, சங்கீதா என பல முன்னணி நடிகர், நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் மிரட்டி விட்டு இருந்தனர்.

இந்த படத்தில் நடிக்க விக்ரம் சுமார் 1.25 கோடி சம்பளம் வாங்கினாராம், சூர்யா 1.15 கோடியும் பாலா 5  லட்சமும் சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது. அது அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய தொகை என சொல்லப்படுகிறது இருப்பினும் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.