ஹீரோ, வில்லன், குணச்சித்திம் என பல கதாபாத்திரங்களில் மிரட்டும் சத்யராஜின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

Sathyaraj

Sathyaraj total net worth : தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நாயகன் சத்யராஜ். இவர்  முதலில் வில்லனாக நடித்து அறிமுகமானர். போகப்போக தனது திறமையின் மூலம் ஹீரோ என்ற அந்தஸ்தை பிடித்தார். அதன் பிறகு இவர் நடித்த தாய் மாமன், நடிகன், என்னம்மா கண்ணு, வால்டர் வெற்றிவேல், வில்லாதி வில்லன், மக்கள் என் பக்கம் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து அசத்தினார்.

தற்பொழுது வயது முதிர்வின் காரணமாக டாப் ஹீரோக்களின் படங்களில் அப்பா, குணச்சித்திரம் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வலம் வருகிறார் இப்படிப்பட்ட சத்யராஜ் 1954 ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி கோவையில் பிறந்தார் இவருடைய உண்மையான பெயர் ரங்கராஜ். இவருக்கு சிபிராஜ் மற்றும் திவ்யா என ஒரு மகன், மகள் இருகின்றனர்.

குடும்பத்துடன் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வரும் சத்யராஜ் இன்று பிறந்தநாள் காணுகிறார். இந்த நிலையில் அவருடைய சொத்து மதிப்பு குறித்து நமக்கு தகவல் வெளியாகியுள்ளது சத்யராஜுக்கு சென்னையில் சொந்தமாக வீடு உள்ளது அந்த வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

அந்த வீட்டின் மதிப்பு மட்டுமே சுமார் 5 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் அவரிடம் Fortuner, Ford endeavour, innova என மூன்று கார்களை வைத்திருக்கிறார் இந்த கார்களின் மதிப்பு மட்டுமே சுமார் 72 லட்சம் என இருக்கும் என கூறப்படுகிறது சொந்தமா நாகம்மாள் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்திருக்கிறார்.

sathyaraj
sathyaraj

இதன் மூலம் அவருக்கு வருமானம் வந்து கொண்டிருக்கிறது. இது தவிர வருடத்திற்கு குறைந்தது மூன்று, நான்கு படங்களிலும் நடித்து ஓடுகிறார். இதனால்  மட்டுமே அவளுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் வருகிறது. சத்யராஜ் மொத்த சொத்து மதிப்பு சுமார் 60 கோடியிலிருந்து 70 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.