நடிகர் சூர்யாவை தொடர்ந்து அவரது தம்பி கார்த்தியும் சினிமா உலகில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் இவர் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வெளிவந்து வெற்றி பெறுகின்றன இதனால் மக்கள் மற்றும் பிரசிகர்கள் மத்தியில் பேமஸ்ஸான ஒரு ஹீரோவாக கார்த்தி இடம் பெற்று இருக்கிறார்.
இவர் இந்த ஆண்டில் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே வெற்றிப் படங்கள் தான். அந்தவகையில் பொன்னியின் செல்வன், விருமன் போன்ற படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டில் தீபாவளியை முன்னிட்டு கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் சர்தார்..
இந்தப் படத்தை எஸ்.பி.மத்ரன் இயக்கியிருந்தார் கார்த்தி தனக்கே ஊறிய பாணியில் சூப்பராக நடித்திருந்தார் அதுவும் இந்த படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் சூப்பர் கார்த்தி மிரட்டி இருந்தார் இவருடன் கைகோர்த்து ராசி கண்ணா, முனீஸ் காந்த், ராஜிஷா விஜயன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர் படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று சூப்பராக ஓடியது.
அதன் காரணமாக இந்த படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது இதுவரையிலும் சர்தார் திரைப்படம் எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் 70 கோடியை நோக்கியே இந்த படத்தின் வசூல் போய்க் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
தற்பொழுதும் இந்த படத்திற்கான மவுசு குறையாமல் இருப்பதால் இந்த படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது இதனால் இந்த வருடத்தில் ஹாட்ரிக் வெற்றியை நடிகர் கார்த்தி ருசிப்பார் என சொல்லப்படுகிறது. இதனால் நடிகர் கார்த்தியை செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகிறாராம்.