தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கி வரும் நடிகர்கள் தான் தல அஜித் மற்றும் தளபதி விஜய் இவர்கள் இருவருமே ஆரம்ப காலகட்டத்தில் இருந்து தற்போது வரை நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் இவர்களுக்கு கை கொடுத்துக் கொண்டே போகிறது அந்த வகையில் பார்த்தால் தல அஜித் நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது அதே போல் தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
ஒரு காலத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் என்றால் அது ராஜாவின் பார்வையிலே திரைப்படம் தான் ஜானகி சௌந்தர் இயக்கத்தில் கடந்த 1995ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் எஸ் சௌந்தரபாண்டியன் இந்த திரைப்படம் குறித்து ஒரு பேட்டி ஒன்றில் கூறியுள்ளாராம்.
அதில் இந்த திரைப்படத்தின் கதை சொன்னதும் அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரும் உடனே ஓகே சொன்னார்கள் அதனால் இந்த திரைப்படத்தின் பட்ஜெட் ரொம்பவும் கம்மி ஆகி விட்டது அதுமட்டுமல்லாமல் இவர்களுக்கு பெரிதாக எதுவும் சம்பளம் கொடுக்கவில்லை என கூறினாராம்.
அதாவது விஜய் வெளி தயாரிப்பாளரிடம் நடித்த முதல் படம் இந்த திரைப்படம் அதேபோல் விஜய் ரொம்ப கம்மியான சம்பளம் தான் வாங்கினாராம் ஆனால் அஜித் அந்த சம்பளத்தை கூட வாங்கவில்லை என கூறப்படுகிறது மேலும் இந்த தகவல் தற்பொழுது தல அஜித் மற்றும் தளபதி விஜய் ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலாகி வருகிறது.
அதுமட்டுமல்லாமல் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இவர்கள் 2 பேரும் இன்னும் ஒரு சில திரைப்படங்களில் இணைந்து நடித்தால் மிகவும் நன்றாக இருக்கும் என கூறி வருகிறார்கள் ஒரு சில ரசிகர்கள் இவர்களுக்கு இப்படி ஒரு வரலாறு இருக்கிறதா இது தெரியாம போச்சே என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.