இந்தியாவில் ஐபிஎல் போட்டி கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது 15 வது கட்ட சீசன். அடுத்த வருடம் ஆரம்பத்திலேயே தொடங்க இருப்பதால் பல்வேறு விதிமுறைகள் மற்றும் மாற்றங்கள் நடந்து வருகிறது இதுவரை 8 அணிகள் மோதிய நிலையில் இரண்டு அணிகள் புதிதாக விளையாட இருப்பதால் ஒவ்வொரு அணிக்கும் 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு அணியும் மூன்று இந்தியர்கள் ஒரு வெளிநாட்டு வீரர் என தக்கவைத்துக் கொள்ளலாம் அல்லது இரண்டு வெளிநாட்டு வீரர்கள், இரண்டு இந்திய வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் இதனை அடுத்து ஒவ்வொரு அணியும் சிறந்த வீரர்களை தன் வசப்படுத்திக் கொள்ள அதிக முனைப்பு காட்டி வருகிறது.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலாவதாக நான்கு பேர்களை தக்கவைக்க தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலாவதாக தல தோனி தக்கவைத்துக் கொள்ள முயற்சி காட்டி உள்ளது. ஆனால் தல தோனியோ சென்னையில் நான் விளையாடும் போட்டி கடைசி என கூறி யுள்ளார்.
இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி பாதியில் வெளியேறுவது தெள்ளத்தெளிவாக தெரிந்தாலும் தல தோனியும் என்னை முதல் வீரராக எடுக்க முனைப்பு காட்டி உள்ளது. ஆனால்தோனியோ என்னை நீங்கள் 4-வது வீரராக எடுத்தால் போதும் என சிஎஸ்கே அணியிடம் அவர் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.
முதல் வீரருக்கு 16 கோடியும், இரண்டாவது வீரருக்கு 12 கோடியும், மூன்றாவது வீரருக்கு 8 கோடியும் நான்காவது வீரருக்கு 6 கோடியும் ஒரு அணி கொடுக்க வேண்டும் இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் தோனியை தக்கவைத்து 16 கோடியை கொடுக்க முனைப்பு காட்டியது ஆனால் தோனியோ எனக்கு நீங்கள் நான்காவது இடத்தை கொடுத்து 6 கோடி கொடுத்தால் போதும் என கூறியுள்ளாராம்.