கோப்ரா படத்தில் நடித்ததற்காக “சியான் விக்ரம்” வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

vikram
vikram

சினிமா உலகில் எப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனது முழு திறமையை வெளிக்காட்டி படத்தின் வெற்றிக்கு பக்க பலமாக இருப்பவர் நடிகர் விக்ரம் இவர் தனது முதல் படமான சேது படத்திலேயே தனது முழு திறமையை காட்டி இருப்பார்.

அதனைத் தொடர்ந்து இவர் நடித்த ஐ, அந்நியன், பிதாமகன் போன்ற பல்வேறு படங்களில் தனது நடிப்பு திறமையும் வேற லெவலில் காட்டி இருப்பார். இப்படி சினிமா உலகில் வெற்றியை மட்டுமே ருசித்து ஓடிக்கொண்டிருந்த விக்ரமுக்கு அண்மை காலமாக அவர் நடிக்கும் படங்கள் பெரிய அளவில் வெற்றியை ருசிக்காததால் அவரது மார்க்கெட் குறைந்துள்ளதாக பலரும் கூறி வருகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் தான் அஜய் ஞானமுத்து உடன் கைகோர்த்து கோப்ரா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் விக்ரமுடன் கைகோர்த்து ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, இர்பான் பதான், மியா ஜார்ஜ், ரவீனா ரவி, மீனாட்சி கோவிந்தராஜன், roshan mathew, ரோபோ சங்கர் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.

இந்த படம் நாளை கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படம் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்திற்காக நடிகர் விக்ரம் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது. கோப்ரா திரைப்படத்திற்காக நடிகர் விக்ரம் ரொம்ப மெனக்கெட்டு உள்ளார்.

மேலும் இந்த படத்தில் பல்வேறு விதமான கெட்டப்புகளை போட்டு நடித்திருக்கிறார் இந்த படத்திற்காக நடிகர் விக்ரம் சுமார் 25 கோடி சம்பளம் வாங்கி உள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றன. இந்த படம் நூறு கோடி பொருள் செலவில் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் நிச்சயம் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் என படக்குழுவும் விக்ரமும் பெரிய அளவில் நம்பி இருக்கின்றனர்.