16 வயதினிலே படத்தில் நடித்ததற்காக ரஜினி, கமல், ஸ்ரீதேவி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

16 vayathiliye
16 vayathiliye

சினிமா உலகை பொறுத்தவரை திறமையை இருப்பவர்கள் படத்தின் கதையையும் நன்றாக அறிந்து கொண்டு அதற்கு ஏற்ற மாதிரி நடித்தால் போதும் அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் அந்த படத்தில் நடித்த  நடிகர், நடிகைகளும் பிரபலமடைந்து அடுத்த லெவலுக்கு முன்னேறுவார்கள் அதை பல வருடங்களுக்கு முன்பே செய்து அசத்தி தற்போது உச்ச நட்சத்திரங்களாக சிலர் பயணிக்கின்றனர்.

அந்த வகையில் பாரதிராஜா இயக்கத்தில் 1977ஆம் ஆண்டு ரஜினி, கமல், ஸ்ரீதேவி ஆகியோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் 16 வயதினிலே. இந்த படத்தில் அப்போது எந்த ஒரு பெரிய நடிகர் இல்லை என்றாலும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு திறமையான நடிகர்களை வைத்து பாரதிராஜா சிறப்பாக நடிக்க வைத்து படத்தை எடுத்திருந்தார்.

படமும் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு வித்தியாசமான கதை களமாக இருந்தது அதிலும் குறிப்பாக இதில் ரஜினி, கமல், ஸ்ரீதேவி ஆகிய மூவரின் நடிப்பும் வேற லெவல் இருந்ததால் படம் இப்போதுவரையிலும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் 16 வயதினிலே படத்தில் நடித்த பிரபலங்கள் எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளனர் என்ற தகவலும் நமக்கு கிடைத்துள்ளது.

அதன்படி பார்க்கையில் இந்த படத்தில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் கமல்தான். 1. 16 வயதினிலே படத்தில் சப்பாணியாக நடித்ததற்காக நடிகர் கமல் சுமார் 27 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளார். 2. ரஜினி பரட்டை கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சுமார் 3000 சம்பளம் வாங்கி உள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு தான் ரஜினிக்குதமிழ் சினிமாவில் வாய்ப்புகள் ஏராளமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 3. 16 வயதினிலே படத்தில் மயிலு என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தினார் ஸ்ரீதேவி.இந்தத் திரைப்படத்துக்காக அவர் சுமார் 9 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.