16 வயதினிலே படத்தில் நடித்ததற்காக ரஜினி வாங்கிய முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா.? கடைசி நேரத்தில் சம்பளத்தில் கைவைத்த பாரதிராஜா.!

rajini-
rajini-

தமிழ் சினிமா உலகில் எத்தனையோ ஹிட் படங்கள் இருக்கின்றன அதில் ஒன்றாக பார்க்கப்படுவது 16 வயதினிலே திரைப்படம் இந்த படம் காலம் கடந்து இப்பொழுதும் பேசப்படுகிறது. அந்த அளவிற்கு படம் ஹிட். அதனால் மக்கள் மத்தியில் இப்போவும் நிலைத்து நிற்கிறது. இந்த திரைப்படத்தை பாரதிராஜா தனக்கே உரிய பாணியில் எடுத்திருந்தார்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக பார்க்கப்படுவது சப்பாணி, மயில், பரட்டை கதாபாத்திரம் தான் இந்த மூன்று கதாபாத்திரங்களுமே மிக சிறப்பான நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்திருந்தார் பாரதிராஜா சப்பாணி கதாபாத்திரத்தில் உலக நாயகன் கமலஹாசன், மயில் கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவியும், பரட்டை கதாபாத்திரத்தில் ரஜினியும் நடித்திருந்தனர்.

இந்த மூன்று பேரும் நடிப்பு படத்தில் செம்ம சூப்பராக இருந்தது குறிப்பாக கமல் பிரமாதமாக நடித்து அசத்தினார். இந்தப் படத்தில் ஒரு காட்சியில் யாராவது சப்பாணின்னு கூப்பிட்டா சப்புனு ஒரு அற என மயில் சொல்லுவதும், இது எப்படி இருக்கு என்று பரட்டையின் வசனமும் கைதட்டல் வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நடிக்க ஒவ்வொருவரும் எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் என்பது குறித்துதான் தற்பொழுது பார்க்க இருக்கிறோம் கமலஹாசன் இந்தப் படத்திற்காக 27 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினார் இதற்கு அடுத்தபடியாக நடிகை ஸ்ரீதேவி 9000 ரூபாய். பரட்டை கதாபாத்திரத்தில் நடித்த ரஜினி முதலில் 3000 ரூபாய் சம்பளமாக பேசப்பட்டு கடைசியாக 500 ரூபாய் பிடித்துக் கொண்டு..

2500 ரூபாய் தான் பாரதிராஜா கொடுத்தார்களாம். ரஜினி கேரியரில் மிகப்பெரிய ஒரு திருப்புமுனை படமாக 16 வயதினிலே படம் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்பொழுது ரஜினியின் மார்க்கெட்டை வேற அவர் ஒரு படத்திற்கு குறைந்தது 100 கோடியிலிருந்து 120 கோடி வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.