மலையாள சினிமா உலகில் இருக்கும் பெரும்பாலான நடிகைகள் அங்கு ஓரிரு திரைப்படங்கள் நடித்து விட்டு நேரடியாக தமிழ் சினிமா பக்கத்தில் களம் இறங்குகின்றனர். அந்தவகையில் எடுத்தவுடனேயே டாப் நடிகர்கள் படங்களில் நடிப்பதால் அவரது சினிமா பயணம் வெற்றியை குவிகின்றன.
அந்த வகையில் நடிகை பிரியங்கா அருள் மோகன் தொடர்ந்து நடிகர் படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் முதலாவதாக சிவகார்த்திகேயனுடன் கை கொடுத்து டாக்டர் என்னும் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தி இருந்தார். முதல் படமே அமோக வெற்றி படமாக அமைந்ததால் அடுத்த படமும் டாப் நடிகரான சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கி உள்ளார் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் எடுத்துள்ளது. பல்வேறு தடைகளை தாண்டி ஒருவழியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வருகின்ற 10ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. மேலும் சூர்யாவுடன் முதன் முறையாக பிரியங்கா அருள் மோகன் நடித்து உள்ளார்.
இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் பிரியங்கா அருள் மோகன் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்ததற்காக சுமார் ஐம்பது லட்சம் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் சினிமா உலகில் டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்துள்ளார் ஆகமொத்தம் தமிழ் சினிமாவில் இரண்டு திரைப்படங்களில் மட்டுமே தலைகாட்டி உள்ள இவருக்கு ஐம்பது லட்சம் சம்பளம் என்பது அதிகம் என கூறப்படுகிறது. இருப்பினும் அவரது திறமை மற்றும் அவர் நடிக்கும் படங்கள் வெற்றியை காணுவதால் இந்த சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.