பிக்பாஸ் ஐந்தாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது கமல் இதுவரை நடந்த சீசன்களை நல்லபடியாக நடத்தினார். அதுபோல இந்த சீசனையும் சிறப்பாக நடத்தி அசத்தி வருகிறார். மேலும் இந்த சீசன் இறுதி கட்டத்தை அதாவது 100 நாட்களை கடந்து கடைசி கட்டத்தை எட்டி உள்ளது.
பிக் பாஸ் வீட்டில் நாம் எதிர்பார்க்காத போட்டியாளர்கள் கூட இறுதிகட்டத்தை எட்டி விட்டனர். ஆனால் எதிர்பார்த்த ஒரு சில பிரபலங்கள் வராததால் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது அந்த வகையில் சிபி, தாமரை ஆகியோர்கள் வெளியேறியது மிகப்பெரிய ஒரு ஏமாற்றமாகவே ரசிகர்கள் பார்க்கின்றனர் ஏனென்றால் அவர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது அதனால் அவர்கள் இறுதி கட்டத்தை எட்ட முடியவில்லை என்பது சற்று வருத்தமடைய செய்துள்ளது .
அதிலும் குறிப்பாக தாமரைச்செல்வி இறுதிகட்டத்தை எட்டி இருந்தால் போட்டி இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும் என ரசிகர்கள் சொல்லி வருத்தப்பட்டு வருகின்றனர்.
எப்படியோ கடந்த வாரம் மக்கள் மத்தியில் குறைந்த வாக்குகளை பெற்று தாமரைச்செல்வி வெளியேறி உள்ளார். வெளியேறியதும் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்வது மற்றும் வீடியோ லைவ்விலும் பேசிவருகிறார். ஆண்மையில் கூட பிக் பாஸ் போட்டியாளர் ஐக்கி பெர்ரி உடன் இணைந்து இவர் வீடியோ லைவ்வில் பேசினார் என்பது குறிப்பிடதக்கது. தாமரைச்செல்வி பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்பாகவே பல கடன்களை வைத்திருந்தாராம் வீடுகூட பைனான்ஸில் கட்டப்பட்டதாக கூறினார். மேலும் பிக்பாஸில் இருந்து வரும் காசை வைத்து தான் அந்த கடனை அடைக்க வேண்டும் என அவர் சொல்லி வந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இவர் பயணித்ததற்காக எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. ஒரு வாரத்திற்கு தாமரைச்செல்வி 70,000 சம்பளம் என அவர் 14 வாரங்கள் இருந்துள்ளார் ஆக மொத்தம் 980000 சம்பளமாக பெற்றுள்ளாராம். இதில் 30% வரியை கூட பிடித்து விடுவார்களாம் அதன்படி பார்த்தால் இவருக்கு வரும் சம்பளம் ரொம்ப கம்மி எனும் இதற்கு ரசிகர்கள் நீங்கள் பேசாமல் 12 லட்சம் பணம் எடுத்திருந்தால் கூட நல்ல விஷயம் தான் ஆனால் தவற விட்டீர்களே என கூறி வருத்தப்பட்டு வருகின்றனர்.