சூர்யாவை வைத்து “எதற்கும் துணிந்தவன்” படத்தை எடுத்ததற்காக இயக்குனர் பாண்டிராஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..

pandiya raj
pandiya raj

நடிகர் சூர்யா சூரரைப்போற்று, ஜெய்பீம் ஆகிய திரைப்படத்தை தொடர்ந்து பாண்டியராஜ் உடன் கைகோர்த்து நடித்துள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த திரைப்படத்தை பாண்டியராஜ் இயக்கி உள்ளார். இயக்குனர் பாண்டியராஜ் இதற்கு முன்பு பல்வேறு ஹிட் படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பசங்க, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கோலி சோடா, இது நம்ம ஆளு ஆகிய அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன. அதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தையும் இயக்கியுள்ளார் இந்த திரைப்படம் ஒரு வழியாக இன்று கோலாகலமாக வெளியாகி உள்ளது.

எதற்கும் துணிந்தவன் திரைப் படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், சூரி, வினய், சத்யராஜ் மற்றும் பலர் நடிகர், நடிகைகள் நடித்து அசத்தி உள்ளனர். எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திலிருந்து இதுவரை வெளிவந்த அப்டேட்டுகள் அனைத்தும் சிறப்பாக இருந்ததால் தற்போது இந்த திரைப்படத்தை பார்க்க மக்கள் கூட்டம் அலை மோதுகின்றன.

முதல் நாள் காலை விமர்சனத்தின்படி எதற்கும் துணிந்தவன் திரைப்படம் செம மாஸான ஆக்சன் காட்சிகள், சென்டிமென்ட் என அனைத்தும் சிறப்பாக இருப்பதால் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை இயக்கியதற்காக பாண்டியராஜ் எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்ற தகவல் தான் தற்போது கிடைத்துள்ளது.

அதன்படி பார்க்கையில் இந்த திரைப்படத்தை எடுத்ததற்காக பாண்டியராஜ் சுமார் 5 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை ஆனால் கோலிவுட் வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.