சினிமாவில் நடிகர் தனுஷ் தொடர்ந்து வெற்றிப்படங்களை தருவதால் தற்பொழுது உள்ள தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் என்று அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் படத்தில் தனுஷை நடிக்க வைப்பதற்காக வாய்ப்பு தேடி வருகிறார்கள்.
இந்நிலையில் தனுஷ் தற்பொழுது த கிரேக் மேன் என்ற ஹோலிவுட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கர்ணன். இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
கர்ணன் திரைப்படத்திற்கு முன்பு தனுஷ் நடிப்பில் அசுரன் திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியைப் பெற்றதால் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அசுரன் திரைப்படத்தை தொடர்ந்து கர்ணன் திரைப்படத்தையும் தயாரித்திருந்தார்.
இந்த இரண்டு திரைப்படங்களும் சமூகத்தில் ஏற்படும் பெரும் பிரச்சனைகளை மையமாக வைத்து இயக்கப்பட்டுள்ளது.அந்தவகையில் கர்ணன் திரைப்படத்தை மாரிசெல்வராஜ் இயக்கியிருந்தார். இந்நிலையில் கர்ணன் திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றதால் மாரி செல்வராஜ் மீண்டும் தனுஷுடன் கைகோர்க்க உள்ளார்.
அந்த வகையில் இவர்கள் இருவரும் கூட்டணியில் உருவாகியுள்ள படம் அடுத்த வருடம் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கர்ணன் திரைப்படத்திற்குப் பிறகு தனுஷின் மார்க்கெட் எங்கேயோ போக்கி விட்டது என்று தான் கூற வேண்டும் ஏனென்றால் அடுத்த மூன்று வருடங்களுக்கு ஒன்பது திரைப்படங்களில் கமிட்டாகியுள்ளார்.
இந்நிலையில் தனுஷ் கர்ணன் திரைப்படத்தின் நடிப்பதற்காக எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்ற தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தனுஷ் ரூபாய் 12 கோடி சம்பளம் வாங்கினாராம், மாரி செல்வராஜ் 50 லட்சம், சந்தோஷ் நாராயணன் ரூபாய் 75 லட்சம் வாங்கினார்கலாம்.