அட்லீவுடன் இணையும் புதிய படத்தின் அல்லு அர்ஜுன் வாங்க உள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

atlee-and-allu-arjun
atlee-and-allu-arjun

இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் அசிஸ்டெண்டாக இருந்து பின் முழு வித்தையையும் கற்றுக் கொண்டபின் முழுநேர இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இப்பொழுது தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். தோல்வியை இதுவரை சந்திக்காத இயக்குனர்களில் அட்லீ ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் அட்லீ முதலில் ஆர்யா நயன்தாரா, ஜெய், நஸ்ரியா போன்றவர்களை வைத்து எடுத்த படம் ராஜா ராணி முதல் படமே பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது காரணமாக அடுத்தடுத்து டாப் நடிகர்களுக்கு கதை சொல்லும் வாய்ப்பை பெற்றார். முதலாவதாக தளபதி விஜயுடன் இவர் தெறி என்ற திரைப்படத்தில் இணைந்தனர்.

அந்த படம் பிரம்மாண்ட வெற்றியை ருசிக்க அதன் பின் அடுத்தடுத்து தளபதி விஜயுடன் மட்டுமே அவர் கைகோர்த்தார். அந்த வகையில் பிகில், மெர்சல் போன்ற படங்கள் நல்லதொரு வெற்றியை தரவே ஒருகட்டத்தில் தமிழை தாண்டி மற்ற மொழி பக்கமும் தனது திறமையை காட்ட ரெடியானார்.

இப்பொழுது இயக்குனர் அட்லீ ஷாருக்கானுடன் இணைந்து லயன் என்ற படத்தை எடுத்து வந்தாலும் தற்போது நிலவும் சூழல் சரி இல்லாததால் அதை அப்படியே விட்டு இப்பொழுது புஷ்பா பட ஹீரோ அல்லு அர்ஜுனுடன் கைகோர்த்த பணியாற்ற ரெடியாக இருக்கிறார் அவர் சொன்ன கதை ரொம்ப பிடித்துப்போகவே.. அல்லு அர்ஜுன்னும் ஓகே சொல்லிவிட்டாராம் இதனால் இவர்கள் இருவரும் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இணையதளங்களில் உலா வருகின்றன ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என தெரிய வருகிறது இந்த நிலையில் அல்லு அர்ஜுன் அட்லி இணையும் திரைப்படத்திற்கு அல்லு அர்ஜுன் சம்பளம் மட்டுமே பல கோடி என தெரியவருகிறது. ஆம் 100 கோடி சம்பளம் என கூறப்படுகிறது இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் வரை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.