குழந்தையாக இருக்கும் பொழுதே தமிழ் திரையுலகில் நடிக்க ஆரம்பித்த நடிகர் தான் சிம்பு இவர் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.
இவரது நடிப்பில் தற்போது மாநாடு என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இந்நிலையில் சிம்பு இந்த திரைப்படத்திற்கு அடுத்ததாக பத்து தல என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
இதனையடுத்து சமீபத்தில் இவரது நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான திரைப்படம் தான் ஈஸ்வரன் இந்த திரைப்படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ளார் என்பது பலருக்கும் தெரியும்.
ஈஸ்வரன் திரைப்படம் ஒரே மாதத்தில் படப்பிடிப்பு மொத்தமாக முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும் ஈஸ்வரன் படத்தின் வசூல் சென்னையில் மட்டும் எவ்வளவு என தகவல் கிடைத்துள்ளது சென்னையில் மட்டும் ஈஸ்வரன் திரைப்படம் 57 லட்சம் வசூல் ரீதியாக வசூல் செய்துள்ளது என தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவல் தற்போது இவரது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.