ராஷ்மிகா மந்தனா தனது முதல் படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

rashmika mandanna
rashmika mandanna

தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நாயகியாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தானா இவர் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் மேலும் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் போது கிளாமரான உடைகளில் வலம் வருகிறார்.

அதே சமயம் கிளமாரான போட்டோ சூட் நடத்தி அசத்துகிறார். இதனால் ராஷ்மிகா மந்தனாவின் மார்க்கேட் உயர்ந்து கொண்டே இருக்கிறது ஏன் இப்போது கூட ராஷ்மிகா மந்தனா புஷ்பா 2, விஜயின் வாரிசு ஆகிய திரைப்படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த இரண்டு படத்திலேயும் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின்னாக நடித்துள்ளார்.

இந்த இரண்டு படங்களுமே மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தரமாக உருவாகி வருகிறது. இந்த படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி பெரும் பட்சத்தில்  தனது சம்பளத்தை அதிகமாக உயர்த்துவதோடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பல மொழிகளில் பட வாய்ப்பை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் ரஷ்மிகா மந்தனா பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழில் சுல்தான் படத்தில் நடித்த அறிமுகமானார் ஆனால் அந்த படம் பெரியளவு வெற்றி பெறவில்லை.

அதனை தொடர்ந்து இப்பொழுது விஜயின் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் இவர் தமிழில் நடித்த சுல்தான் படம் அவருக்கு முதல் படம் இந்த படத்தில் நடித்ததற்காக நடிகை ராஷ்மிகா மந்தனா சுமார் 30 லட்சம் சம்பளம் வாங்கினார் என கூறப்படுகிறது இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்பொழுது வைரல் ஆகி வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை..