ரஜினியின் கடைசி 5 படங்கள் முதல் நாளில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.? தொடமுடியாத உச்சத்தில் ஜெயிலர்

Rajini
Rajini

தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக வருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.  இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஐந்து படங்களின் முதல் நாளில் அள்ளிய வசூல் எவ்வளவு என்பது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

1. எந்திரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான திரைப்படம் 2.0 இந்த படம் முழுக்க முழுக்க நெட்வொர்க் சிக்னலால் குருவிகள் போன்றவை உயிரிழக்கின்றன இதனால் மனித இனம் பாதிக்கப்படும் என்பதை தெள்ளத் தெளிவாக படம் சொல்லும் இதில்  ரஜினியுடன் இணைந்து அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன், மயில்சாமி என பல நடிகர், நடிகைகள் நடித்த இருந்தனர் படம் வெளிவந்து 400 கோடிக்கு மேல் அள்ளியது. முதல் நாளில் மட்டும் உலக அளவில் 95 கோடி வசூல் செய்தது.

2. பீட்சா, ஜிகர்தண்டா போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் உடன் கைகோர்த்து ரஜினி நடித்த திரைப்படம் பேட்ட.. இந்த படத்தில் ரஜினியின் துள்ளாத நடிப்பு ரசிகர்களை கவரது இழுத்தது  அவருடன் இணைந்து திரிஷா, மாளவிகா மோகனன், சிம்ரன், பாபி சிம்ஹா என பல திரைப்பட்டாளங்கள் நடித்திருந்தனர் படம் 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்தது முதல் நாளில் மட்டும் உலக அளவில் 38 கோடி வசூல் செய்தது.

3. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2020 ஆம் ஆண்டு திரைக்கு வந்த திரைப்படம் தர்பார். மும்பையில் போதை பொருள் கும்பல் ஓவர் அட்டூழியம் செய்கிறது என ரஜினியை அங்கு அனுப்பி வைப்பார்கள் அவர் போன வேகத்திலேயே ரவுடிகளை அடித்து நொறுக்குவார் . படம் முழுக்க ஆக்சன் தான் அவர் ரஜினியுடன் இணைந்து நிவேதா தாமஸ், யோகி பாபு, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஸ்ரீமன், சுனில் ஷெட்டி என பல திரைப்பட்டாளங்கள் நடித்திருந்தனர் இந்த படம் வெளியாகி முதல் நாளில் உலகம் முழுவதும் 52 கோடி வசூல் செய்தது.

4.   விசுவாசம் படத்தை இயக்கிய வெற்றி கண்ட சிறுத்தை சிவா உடன் ரஜினி கைகோர்த்து நடித்த திரைப்படம் அண்ணாத்த இந்த படம் முழுக்க முழுக்க அண்ணன் – தங்கை பாசத்தை எடுத்துரைக்கும் ஒரு படமாக இருந்தது ரஜினியுடன் இணைந்து ஜெகபதிபாபு, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, பிரகாஷ்ராஜ், சூரி என மிகப் பெரிய திரை பட்டாளமே நடித்து இருந்தது படம் முதல் நாளே உலக அளவில் 50.85 கோடி வசூல் செய்தது.

5. ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில்  2023 ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர். படத்தில் ரஜினியின் மாறுபட்ட நடிப்பு பலரையும் கவர்ந்து விட்டது அவருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், சுனில், தமன்னா என பலரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பின்னி படம் எடுத்தனர் இதனால் படம் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது படம் வெளியாகி  இத்துடன் 500 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது படம் முதல் நாள் உலகம் முழுவதும் 91.20 கோடி வசூல் செய்தது.