ரஜினியின் அண்ணாத்த படம் எந்தெந்த ஏரியாவில் எவ்வளவு வசூல் அள்ளியது தெரியுமா.? அசர வைக்கும் ரிப்போர்ட்.

annathaa
annathaa

சினிமாவுலகில் 40 ஆண்டுகளாக நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். கடந்த தீபாவளி அன்று கூட ரஜினியின் அண்ணாத்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று சிறப்பாக வெற்றி நடை கண்டு வருகிறது.

இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கைகோர்த்து மிகப்பெரிய ஒரு பட்டாளமே நடித்துள்ளது. அதில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர். ஒவ்வொருவருக்கும் சிறந்த கதாபாத்திரங்கள் கொடுத்துள்ளதால் படத்தை தற்போது ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

அண்ணாத்த திரைப்படம் முதல் இரண்டு நாட்களில் மட்டுமே 100 கோடியை அள்ளி புதிய சாதனை படைத்தது. அதன்பின் மழை குறுக்கிட்டதால் தற்போது வசூல் கொஞ்சம் பாதிக்கப்பட்டுள்ளது. முதல் வாரத்தில் மட்டும் 150 கோடிக்கு மேல் வசூல் ஆகியுள்ளது.

இந்த நிலையில் அண்ணாத்த திரைப்படம் எந்த ஏரியாவில் எவ்வளவு கோடியை அள்ளி உள்ளது என்பது குறித்து விவரமாக நாம் பார்க்க உள்ளோம். அந்த வகையில் இதுவரை தமிழகத்தில் மட்டும் அண்ணாத்த திரைப்படம் 84 கோடி வசூல் செய்துள்ளதாம்.

ஓவர்சீஸ் இடங்களில் 45 கோடி வசூல் வேட்டை நடத்தியுள்ளது.  தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் 7.5 கோடி, வட இந்தியா 2 கோடி, கர்நாடகா 10 கோடி, கேரளாவில் 2 கோடி என ஓவர் ஆள் அண்ணாத்த திரைப்படம் வேற லெவல் வசூல் வேட்டை நடத்தியுள்ளது. இதிலும் வருகின்ற நாட்களில் மிகப் பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தி புதிய சாதனை படைக்கும் என தெரியவருகிறது.