மலையாள சினிமாவில் உச்ச நட்சத்திரமாக நடித்து வரும் நடிகர் மோகன்லால். மலையாள சினிமாவில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வந்தாலும் பிற மொழிகளிலும் கவனம் செலுத்துவது வழக்கம் அந்த வகையில் மலையாளத்தை தொடர்ந்து மோகன்லால் தமிழ் சினிமாவிலும் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அங்கேயும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.
அங்கும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் யாரெல்லாம் உருவாகி ஆகியிருக்கின்றன தமிழில் இவர் பாப்கார்ன், உன்னைப்போல் ஒருவன், ஜில்லா, இருவர், காப்பான் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் மோகன்லாலுக்கு இன்னும் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்க படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் கூட இவர் நடிப்பில் வெளியான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் படம் உலக அளவில் வெளிவந்து வெற்றி கோடியை நாட்டி வருகிறது. சினிமாவில் நடிப்பதையும் தாண்டி மோகன்லால் பல்வேறு டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் கலந்துகொண்டும் உள்ளவர் என்பது குறிப்பிடதக்கது தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் மோகன்லாலுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் மோகன்லால் சொத்து குவித்து வைத்திருக்கும் மதிப்பு எவ்வளவு என்பது குறித்து தகவல் ஒன்று உலா வருகிறது அதன்படி பார்க்கையில் மோகன்லாலின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 310 கோடி இருக்கும் என தெரியவந்துள்ளது.
சினிமாவில் பல ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் மோகன்லாலின் சொத்து மதிப்பு இவ்வளவு என்பது ஓகே என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர் பெருமளவு சம்பாதிக்கவில்லை என்றாலும் இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு அதற்கு பலனாக இது கிடைத்தது நல்ல விஷயமே என சொல்லப்படுகிறது.