சூர்யா, சிவகார்த்திகேயனுடன் ஜோடி போட்ட பிரியங்கா அருள் மோகனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

Priyanka arul mohan
Priyanka arul mohan

Priyanka Arul Mohan : நடிகை பிரியங்கா அருள் மோகன் கன்னட படத்தில் நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து தெலுங்கில் நன்றாக நடித்து வந்த இவருக்கு தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான டாக்டர் படத்தில் நடித்து என்ட்ரி கொடுத்தார்.  முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார்.

இந்த படம் வெளிவந்து 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி பெற்றது. மீண்டும் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்து டான் படம் நடித்தார். இந்த படமும் 100 கோடி மேல் வசூல் அள்ளி வெற்றிகண்டது. அதன் பிறகு டாப் ஹீரோக்கள் படங்களில் மட்டுமே நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் சூர்யா உடன் எதற்கும் துணிந்தவன் படத்து பிறகு நடிகர் தனுஷ் உடன் கேப்டன் மில்லர் படத்தில் விறுவிறுப்பாக நடித்து முடித்துள்ளார்.

பழனிச்சாமி கூட பாக்கியா போறது ரொம்ப தப்பு.. காண்ட்ராக்ட் வேலையை கெடுக்க சதி திட்டம் போடுவாரா கோபி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன் ஆக்ஷன் செய்துள்ளார் என பேச்சுக்கள் வெளி வருகின்றன. இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது தற்பொழுது பிரியங்கா அருள்மோகன்  கைவசம் பிரதர் என்னும் படத்தில் நடித்து வருகிறார். அது தவிர தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி சினிமா உலகில் வெற்றி நடிகையாக ஓடிக் கொண்டிருக்கும் பிரியங்கா அருள் மோகன் இன்ஸ்டா பக்கத்திலும் தற்பொழுது கிளாமரான புகைப்படம் மற்றும் வீடியோகளை வெளியிட்டு வருகிறார். அதனால் நாளுக்கு நாள் பிரியங்கா அருள் மோகனுக்கு ரசிகர்கள் குவிந்த வண்ணமே இருக்கின்றனர்.

‘துருவ நட்சத்திரம்’ படம் எப்படி இருக்கு? முதல் விமர்சனத்தை வெளியிட்ட பிரபல இயக்குனர்..

இந்த நிலையில் பிரியங்கா அருள் மோகன் சேர்த்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு குறித்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் ஒரு படத்திற்கு சுமார் 30 லட்சத்திலிருந்து 50 லட்சம் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது மேலும் இவரிடம் சில விலை உயர்ந்த கார்கள் இருப்பதாக கூறப்படுகிறது பிரியங்கா அருள்மோகன் சொத்து மதிப்பு சுமார் 12 கோடி இருக்கும் என பரவலாக பேசப்படுகிறது.