திரை உலகில் இருக்கும் நடிகர்கள் பலரும் அறிய வேண்டிய முதல் விஷயம் தனக்கு என்ன செட்டாகுமோ அது போன்ற கதையை தேர்வு செய்ய வேண்டும் அதை தவறவிட்டால் உங்களது மார்க்கெட் கீழே விழுந்து விடும்.. ஆனால் ஒரு சிலர் சரியாக புரிந்து கொண்டு ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் வெற்றியை கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் சிவகார்த்திகேயன் எப்பொழுதுமே காமெடி கலந்த படங்கள் அவருக்கு வெற்றியை பெற்று தருகின்றன. அதுபோன்றுதான் தொடர்ந்தும் அவர் படங்களை தேர்வு செய்து நடிக்கிறார் அதனால் அவரது படங்கள் ஒவ்வொன்றும் வசூல் ரீதியாக வெற்றி பெறுகின்றன கடைசியாக இவர் நடித்த டாக்டர், டான் ஆகிய இரண்டு படங்களுமே காமெடி கலந்த படங்கள் தான்.
அதே சமயம் அந்த படத்தில் சில மெசேஜ்களும் இடம் பெற்று இருக்கும் இந்த இரண்டு படங்களும் வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது இந்த படங்களைத் தொடர்ந்து சிவ கார்த்திகேயன் நடித்த திரைப்படம் தான் பிரின்ஸ்.. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கினார். படம் முழுக்க முழுக்க காமெடி, ரொமான்ஸ், சென்டிமென்ட் கலந்த ஒரு படமாக இருந்தது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்து உக்கரை நாட்டு நடிகை மரியா, பிரேம்ஜி கங்கை அமரன், சூரி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். படம் வெளிவந்து ரசிகர்களை கொண்டாட வைத்தாலும் பொதுமக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இந்த திரைப்படம் ஓடியது. இருப்பின்னும் பிரின்ஸ் திரைப்படம் வசூலில் எந்த உரையும் வைக்கவில்லை..
இப்படி இருக்கின்ற நிலையில் ஏழு நாள் முடிவில் உலகம் முழுவதும் பிரின்ஸ் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் இந்த திரைப்படம் ஏழு நாள் முடிவில் மற்றும் 42 கோடி வரை வசூலித்திருப்பதாக தகவல்கள் சொல்லப்படுகிறது வருகின்ற நாட்களில் பெரிய படங்கள் எதுவும் இல்லை என்பதால் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.