புகழ் பெற்ற ராஜராஜ சோழனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது வரையிலும் திரையரங்கில் கூட்டம் குறையாமல் ஓடிக்கொண்டிருக்கிறது இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் இயக்கியுள்ளார் மேலும் இந்த படத்தை அமரர் கல்கி அவர்கள் எழுதிய நாவலில் இருந்து கருப்பனையாக உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் இந்த பொன்னியின் செல்வன்.
இந்த திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், பார்த்திபன், உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதே நேரத்தில் தனுஷின் திரைப்படம் நானே வருவேன் என்ற திரைப்படம் வெளியாகி கடுமையான விமர்சனத்தை பெற்றது மட்டுமல்லாமல் வசூலில் மிகவும் மோசமாக அடி வாங்கியது.
தற்போது வரையும் ஓடிக் கொண்டிருக்கும் பொன்னியன் செல்வன் திரைப்படம் வெளியாகி 17 நாட்களில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் 446 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது அந்த சாதனையை வெறும் 17 நாட்களில் ஓரம் கட்டியது பொன்னியின் செல்வன்.
மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வசூல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தின் வசூலை முறியடிக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன், நடித்த இந்த திரைப்படம் 800 கோடி வசூலித்து உள்ளது.
இப்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் 500 கோடி வசூலை தாண்டி உள்ளதாக கூறப்படுகிறது விரைவில் ரஜினியின் 2.0 படத்தின் வசூலை முறியடிக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தற்போது தீபாவளி அன்று வெளியாக உள்ள சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் மற்றும் கார்த்தியின் சர்தார் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது வரையிலும் பொன்னின் செல்வன் திரைப்படம் புக்கிங்கில் இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.