இயக்குனர் மணிரத்தினம் எப்பொழுதுமே வித்தியாசமான கதைகளை கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் அந்த வகையில் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி அவர் அதை படமாக எடுத்தார் படம் நீளமாக இருந்த காரணத்தினால் இரண்டு பாகங்களாக வெளியிட்ட முடிவு செய்தார்.
முதல் வாரம் அவர் சொன்னபடி கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி.. கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது மக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என அனைவரும் பொன்னியின் செல்வன் கதையை படித்திருக்கிறார்கள் அதை படமாக பார்க்க இன்னும் அவர்களை தூண்டியது அதனால் ரசிகர்களையும் தாண்டி பலரும்..
இந்த படத்தை போட்டி போட்டு கொண்டு பார்த்தனர். படம் நினைத்ததை விட சிறப்பாக இருந்ததால் நல்ல விமர்சனத்தையே பலரும் கொடுத்தனர் அதன் விளைவாக பொன்னியின் செல்வன் திரைப்படம் சூப்பராக ஓடியது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் ஐஸ்வர்யா ராய், திரிஷா,, விக்ரம் பிரபு, கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம்..
மற்றும் கிஷோர், ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். படம் நன்றாக ஓடியதன் காரணமாக இந்த படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்தது. இதுவரை மட்டுமே பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் 440 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருக்கிறது.
தமிழகத்தில் மட்டுமே இந்த திரைப்படம் மொத்தமாக இதுவரை சுமார் 220 கோடிய அள்ளி புதிய சாதனை படைத்திருக்கிறது நேற்று தீபாவளியை முன்னிட்டும் பொன்னியின் செல்வன் திரைப்படம் சூப்பராக ஓடி இருக்கிறதாம். அதன் வசூல் கூட வந்துள்ளது. தீபாவளி தினத்தை முன்னிட்டு நேற்று மட்டுமே 3.5 கோடிக்கு மேல் பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூல் செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.