தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்,நடிகர்,பாடகர் என அனைத்து திறமைகளையும் கொண்டு வலம் வரும் பிரபலங்களில் ஒருவர் தான் விஜய் ஆண்டனி இவர் ஆரம்ப காலகட்டத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பல திரைப்படங்களில் இசை அமைத்து பின்பு இவர் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க இவர் நடித்த ஒரு சில திரைப்படங்கள் இவருக்கு நன்றாக கை கொடுத்து விட்டது.
அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் என்ற திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அதிகம் வசூல் செய்துவிட்டது மேலும் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் தான் கோடியில் ஒருவன் இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கியிருந்தார் மேலும் இந்த திரைப்படத்தில் நடிகை ஆத்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார்.
தமிழக அரசு உத்தரவு படி இந்த திரைப்படம் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல விமர்சனத்தை பெற்று விட்டது. இந்நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி மூன்று நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது பற்றி ஒரு தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
ஆம் இந்த திரைப்படம் வெளியாகி மூன்று நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் சுமார் 5 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது 50 சதவீத இறக்கைகளுடன் வெளியாகிய இந்த திரைப்படம் 5 கோடி வசூல் செய்தது என்பதே ஒரு பெரிய விஷயம்தான் என விஜய் ஆண்டனியின் ரசிகர்கள் பலரும் இந்த தகவலை கொண்டாடி வருகிறார்கள்.
மேலும் ஒரு சில ரசிகர்கள் விஜய் ஆண்டனி நடிக்கும் பல திரைப்படங்களை பற்றி பலவிதமான கேள்விகளை எழுப்புவது மட்டுமல்லாமல் பலரும் இவர் அடுத்து திரைப்படத்தில் எப்பொழுது நடிப்பார் என கேட்டு வருகிறார்கள்.